தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருந்த ரஃபேல் வாட்ச் தொடர்பாக தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வியெழுப்பியதையடுத்து, தி.மு.க அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிடப்போவதாக அண்ணாமலை கூறிவந்தார். அவ்வாறே நேற்று (ஏப்ரல் 14), கனிமொழி, கே.என்.நேரு, எ.வ.வேலு, கலாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின், சபரீசன், பொன்முடி, கலாநிதிமாறன் எனப் பலர் உட்பட தி.மு.க-வின் சொத்துமதிப்பு குறித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அண்ணாமலை

இதற்கு எதிர்வினையாற்றிய தி.மு.க-வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, `இது குறித்த சரியான ஆதாரங்களை 15 நாள்களுக்குள் தி.மு.க அலுவலகத்தில் அண்ணாமலை ஒப்படைக்கவில்லையென்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என நேற்று எச்சரித்தார். இந்த நிலையில், புகாரளிக்க சி.பி.ஐ-யின் அப்பாயின்மென்ட்டுக்காகக் காத்திருப்பதாக அண்ணாமலை இன்று தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் வேலை காரணமாக கர்நாடகா செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “வியாழன் அல்லது வெள்ளி, சி.பி.ஐ-யிடமிருந்து அப்பாயின்மென்ட் வந்ததும் புகார் கொடுக்கணும். புகார், கோப்புகள் (Document) எல்லாம் ரெடியா இருக்கு. இந்த வாரமே கொடுத்துட்டு வந்துடலாம்னு இருக்கேன். ஊழல் செய்த பணத்தை தி.மு.க வக்கீலுக்குக் கொடுக்க நினைத்தால், நிச்சயமாக வழக்கு தொடுக்கட்டும். ஏன்னா சாராயத்தில் கொள்ளையடித்த பணத்தை எதுலயாவது செலவு பண்ணிதான் ஆகணும். நீதிமன்றம் இருக்கு, மக்கள் மன்றம் இருக்கு, அதைப் பற்றி பயமில்லை.

அண்ணாமலை

நேற்று நான் வைத்திருக்கக்கூடிய எல்லாக் குற்றச்சாட்டுகளுமே, ஆதாரபூர்வமாக கம்பெனி பெயரோடு வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள். அதுல ஒரு விஷயத்தை மறுக்கட்டுமே. ரெட் ஜெயன்ட் மூவிஸோ, நோபல் ஸ்டீலோ, வெஸ்ட் பாங்க் குற்றச்சாட்டோ, CMRL ஊழல் விவகாரமோ… நானும் காத்துக்கொண்டிருக்கேன் 24 மணிநேரம் முடிஞ்சிடுச்சு. அடிப்படையா ஒரு குற்றச்சாட்டைக்கூட மறுக்க முடியல.

இன்னும் பல ஃபைல்ஸ் வெளியிடப்போறோம். இதுக்கெல்லாம் பயப்பட்ற ஆள் நான் கிடையாது. எங்கயும் தப்பிச்சுப் போக முடியாது. என்கிட்ட எந்த மிரட்டலும் வேலைக்கு ஆகாது. ஆர்.எஸ்.பாரதி அல்ல, அவருடைய தந்தையே வந்தாலும் சந்திக்கத் தயாராகயிருக்கிறேன். 15 நாள்கள் கழிச்சு இதைவிட எந்த ஆதாரம் கொடுக்கிறது.

ஸ்டாலின்

நோபல் ஸ்டீல்ல உதயநிதி, அன்பில் மகேஸ் இயக்குநரா இல்லனு சொல்லட்டும், அந்தப் பணம்தான் மணி லாண்டரிங்ல வருதுனு சொல்றேன், அத இல்லனு சொல்லட்டும். தமிழக மக்கள் ஊழலை ஏற்றுக்கொண்டார்கள் என மனப் பிராந்தியில் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். என்னுடைய போராட்டம் தொடரும். ஓர் உயிர், நூறு வருஷம் வாழணும்னா வந்தோம். எப்போ போனாலும், ஆண்டவன் இந்த உயிரை எடுத்துக்கப்போறான்”என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *