வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-புதுடில்லி மதுபான கொள்கை வழக்கில், ஏப்.16 ல்ஆஜராகும்படி, ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, சி.பி.ஐ., ‘சம்மன்’ அனுப்பியுள்ள நிலையில் ஏப். 17-ம் தேதியன்று சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அமல்படுத்தப்பட்டு, பின் விலக்கிக் கொள்ளப்பட்ட புதிய மதுபான கொள்கையில், பல கோடி ரூபாய் முறைகேடு குறித்து சி.பி.ஐ., விசாரிக்க, துணைநிலை கவர்னர் வினய் குமார் பரிந்துரை செய்தார்.
![]() |
இதன்படி வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ., அதிகாரிகள், டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை விசாரித்த பின் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக, புதுடில்லியில் உள்ள, சி.பி.ஐ., அலுவலகத்தில், நாளை (ஏப்.16) காலை 11:00 மணிக்கு ஆஜராகும்படி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, சி.பி.ஐ., சம்மன் அனுப்பி உள்ளது.இந்நிலையில் டில்லி சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டிட முதல்வர் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாகவும். இதில் சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது குறித்து விவாதம் நடத்தி முக்கிய தீர்மானம் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் சவுரபா பரத்வாஜ் கூறினார்.
Advertisement
