தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றிற்கு சரியான பதில் அளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசு பெற்ற மாணவர்கள் கூறியதாவது:
உதவியது ‘பட்டம்’
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழை தொடர்ந்து படிப்பேன். வார மலரையும் தவற விடமாட்டேன். இவ்விரு இதழ்களை தொடர்ந்து படித்து வந்ததால் வழிகாட்டி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட பொது அறிவு கேள்விகளுக்கு சுலபமாக பதிலளித்து, லேப்டாப்பை பரிசாக வெல்ல முடிந்தது. வழிகாட்டி கண்காட்சியில் உயர் கல்வி தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் தெளிவான விளக்கம் கிடைத்தது.
பிரவீன்குமார், கடலுார்.
‘தினமலர்’ படித்தால் போதும்
போட்டி நிறைந்த உலகில் பொது அறிவு இல்லாமல் சாதிக்க முடியாது. எனவே பொது அறிவு, நாட்டு நடப்புகளை கவனம் செலுத்தி படித்து வந்தேன். அதனை அங்கீகரிக்கும் வகையில் தினமலர் நாளிதழின் வழிகாட்டி நிகழ்ச்சியில் லேப்டாப் பரிசாக கிடைத்துள்ளது.
தினமலர் நாளிதழை தொடர்ந்து படித்தாலே போதும். அனைத்து போட்டி தேர்வுககளிலும் சாதிக்க முடியும். வழிகாட்டி நிகழ்ச்சியில் ஒரே குடையின் கீழ் அனைத்து உயர் கல்வி தகவல்களும் கிடைத்தது.
திருவிக்ரமன், திருக்கோவிலுார்.
3 நாட்களும் பங்கேற்பு
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியின் கருத்தரங்கின் மூன்று நாட்களும் பங்கேற்றேன். உயர் கல்வி தொடர்பாக கல்வியாளர்கள் சிறப்பான வழிகாட்டுதல்களை தந்தனர். இறுதி நாள் பொது அறிவு போட்டியில் டேப்லெட் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. நான் டேட்டா சயின்ஸ் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த படிப்பு கற்பிக்கப்படும் கல்லுாரிகள் குறித்து தெளிவாக எடுத்துள்ளனர். தினமலருக்கு நன்றி.
அனுஸ்ரீ, புதுச்சேரி
Advertisement
