கர்நாடக மாநிலம், மைசூர் உட்பட பல மாவட்டங்களை ஆட்சி செய்தவர் திப்பு சுல்தான். ‘பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகச் செயல்பட்ட முதல் சுதந்திரப் போராட்ட வீரர்தான் திப்பு சுல்தான். அவர் வளர்ச்சிக்கான ஆட்சி செய்தவர்’ என காங்கிரஸ் கட்சியினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் பல ஆண்டுகளாகக் கூறி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க-வினர், ‘திப்பு சுல்தான் கட்டாய மதமாற்றம் செய்தவர், அவர் சர்ச்சைக்குரியவர், வகுப்புவாதி’ என காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருத்துகளை பல ஆண்டுகளாக முன்வைக்கின்றனர்.

திப்பு சுல்தான்

திப்பு சுல்தான்

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், அரசு சார்பில் திப்பு சுல்தான் ஜெயந்தி விழா அறிவிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வந்தது. 2018-ல் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவை அரசு விழாவாக கொண்டாடுவதை நிறுத்தினர். இதையடுத்து, ‘திப்பு சுல்தான் குறித்த உண்மை வரலாற்றை பா.ஜ.க மாற்ற முயல்கிறது, மதரீதியில் அவரை தவறாக முன்னிறுத்துகிறது’ என பல குற்றச்சாட்டுகளை, பா.ஜ.க மீது காங்கிரஸ் கட்சியினர் முன்வைத்து வருகின்றனர்.

திப்பு சுல்தான் Vs சாவர்க்கர்…

கர்நாடக மாநில பா.ஜ.க தலைவரும் எம்.பி-யுமான நளின் குமார், தினமும் பேட்டி, பேச்சு, அறிக்கையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், நளின் குமார் கட்டீல், திப்பு சுல்தான் குறித்து தற்போது பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

பா.ஜ.க எம்.பி நளின் குமார் கட்டீல்

பா.ஜ.க எம்.பி நளின் குமார் கட்டீல்

இன்று, சிவமோகா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நளின் குமார் கட்டீல், ‘‘காங்கிரஸ் கட்சியினர் திப்புவின் ஜெயந்தி விழா கொண்டாட அனுமதிக்கின்றனர். இது மாநிலத்துக்கு தேவையில்லாத ஒன்று. வரும் சட்டப்பேரவைத் தேர்தல் காங்கிரஸ் Vs பா.ஜ.க-வுக்கு இடையில் நடப்பதல்ல, திப்பு Vs சாவர்க்கர் சித்தாந்தங்களுக்கு இடையில் நடக்கும் தேர்தல். நான் சித்தராமையாவுக்கு சவால் விடுகிறேன். வரும் தேர்தல் சாவர்க்கருக்கும் திப்புவுக்கும் இடையேதான்; இந்த நாட்டுக்கு தேசபக்தர் சாவர்க்கரா அல்லது திப்புவா, யார் தேவை என்பதை விவாதிப்போம் வாருங்கள்’’ என, சித்தராமையாவுக்குச் சவால்விட்டார்.

ஏற்கெனவே கடந்த மாதம் மங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் கட்சித்தொண்டர்களிடம், ‘பொதுப் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டாம், லவ் ஜிஹாத் பிரச்னையில் கவனம் செலுத்துங்கள்’’ எனக் கூறி சர்ச்சையைக் கிளப்பினார் நளின் குமார். இந்த நிலையில், தற்போது திப்பு Vs சாவர்க்கர் எனப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.

‘நளின் குமார் கட்டீலின் இந்தப் பேச்சால், சிறுபான்மை மக்கள் பா.ஜ.க-மீது அதிருப்தியடைய அதிக வாய்ப்பிருக்கிறது’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். கர்நாடகத்தில், 2.5 மாதங்களுக்குள் தேர்தல் நடக்கவிருப்பதால், தலைவர்களின் சர்ச்சைப் பேச்சுகளால், அரசியல் களத்தில் அனல் பறக்கிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล
Judi Bola Judi Bola Parlay