அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை!

அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியது. எனினும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் இருந்து வருகிறார். கெஜ்ரிவாலை கைது செய்வது தான் அமலாக்கத்துறையின் நோக்கம் என ஆம் ஆத்மி விமர்சித்து வருகிறது. இந்நிலையில் கெஜ்ரிவாலுக்கு 4-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.

பொங்கல்: 2.17 லட்சம் மக்கள் அரசு பேருந்துகளில் சொந்த ஊர் பயணம்!

சிறப்பு பேருந்துகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். அரசு சார்பிலும் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு 12 மணி நிலவரப்படி 1,260 சிறப்பு பேருந்துகளுடன் மொத்தம் 3,946 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 2,17,030 பயணிகள் சொந்த ஊருக்கு பயணித்துள்ளனர் என்றும் இதுவரை 1,96,310 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *