புதுச்சேரி: ஏனாம் கிளைச் சிறைக்குள் புகுந்து, பிரபல ரவுடியை கொல்ல முயன்ற வழக்கில் 12 பேருக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

புதுச்சேரியில் பிரபல ரவுடிகள் கருணா, மர்டர் மணிகண்டன், தேங் காய்திட்டு ஜெகன் ஆகியோர் தனி தனிக்கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். அவர்களுக்குள் அடிக்கடி மோதல் நிகழும். இந்நிலையில் கொலை வழக் கில் கைது செய்யப்பட்ட மர்டர் மணிகண்டன், கருணா ஆகியோர் ஆந்திர மாநிலம் அருகேயுள்ள புதுச்சேரி பிராந்தியமான ஏனாம் கிளை சிறையிலும், தேங்காய்திட்டு ஜெகன் காரைக்கால் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

இதில், ஒரு வழக்கு தொடர்பாக 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேங்காய்திட்டு ஜெகன்,காரைக்கால் சிறைக்கு போலீஸ்வேனில் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அரியாங்குப்பம் பாலத்தில் மர்டர் மணிகண்டனின் ஆட்கள் நாட்டு வெடிகுண்டு வீசி தேங்காய்திட்டு ஜெகனை கொலை செய்தனர். இக்கொலைக்கு பழிக்கு பழி வாங்க மர்டர் மணிகண்டனை கொலை செய்ய ஜெகனின் ஆதர வாளர்கள் திட்டமிட்டனர்.

இதையடுத்து புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று 2013 ஆகஸ்ட் மாதம் ஏனாம் சென்றுஅங்குள்ள லாட்ஜில் தங்கியது. 2013 ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி அதிகாலை இக்கும்பல் இரண்டு ஏணிகளை பயன்படுத்தி, சுமார் 25 அடிஉயரம் உள்ள ஏனாம் சிறைச் சுவரில் ஏறி சிறைக்குள் நுழைந்தனர். கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், நைலான் கயிறு, மிளகாய் பொடி, இரண்டு பெட்ரோல் கேன்கள், டேப்கள் ஆகியவற்றுடன் சிறைக் குள் புகுந்த அக்கும்பல், வார்டன் சேகரின் கை, கால்களை கட்டி, வாயில் டேப்பை வைத்து அடைத்தது.

இதை தொடர்ந்து குற்றவாளி அறையின் சாவியை தேடினர். மற்றொரு வார்டன் செல்வம் இதை கவனித்து விசில் ஊதியுள்ளார். இதையடுத்து ஐஆர்பிஎன் போலீஸார் அங்கு ஓடி வந்தனர். இதை தொடர்ந்து அக்கும்பல் கொலை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. ஏனாம் எஸ்.பி புருஷோத்தமன் தலைமையிலான போலீஸ் குழுவினர் அக்கும்பலை துரத்திச் சென்றனர். கிளை சிறையிலிருந்து இருந்து பல கி.மீ தொலைவில் அக்கும்பலை போலீஸார் மடக்கிப்பிடித்தனர். இச்சம்பவம் தொடர்பாக மொத்தம் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு 10 ஆண்டுகளாக புதுச்சேரி தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் ராஜு ஆஜரானார். இவ்வழக்கில் புதுச்சேரி குற்றவியல் தலைமை நடுவர் மோகன் நேற்று காட்டு குப்பம் மணி பாலன், பிள்ளையார் குப்பம் அமுதன், குண்டுபாளையம் திவாகர், நாகை பெருங்கடத்தூர் பிரகாஷ், ஜெயன் சூசை ராஜ், வம்பாகீரப்பாளையம் டக்லஸ் என்ற விஜயகுமார், பாஸ்கர், வைத்தியநாதன், வெங்கடேசன், காரைக்கால் சிவா, பாக்கியராஜ், மூலக்குளம் ஜேஜே நகர் பிரகாஷ் ஆகிய 12 பேருக்கும் 7 ஆண்டுகள் கடுங்காவலும், தலா ரூ.6,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட அஸ்வின், கருணா, வெள்ள சங்கர், பல்லா சுரேஷ் ஆகிய 4 பேர் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சதீஷ் இளவரன், விஜயகுமார் ஆகிய இருவர் ஏற்கெனவே இறந்து விட்டனர். இந்நிலையில் தண்டனை விதிக் கப்பட்ட 12 பேரும் காலாப்பட்டு சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர்.

திவாகர்

தண்டனை பெற்ற கைதி திடீர் மாயம்: இவ்வழக்கில் தண்டனை பெற்ற 12 பேரில் திவாகர் என்பவர் அங்கிருந்து மாயமானார். இந்நிலையில் போலீஸார் தண்டனை பெற்ற கைதிகள் அனைவரையும் சரி பார்த்த போது, திவாகர் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் நீதிமன்றம் முழுவதும் பல இடங்களில் தேடினர். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து எஸ்டிஎப் போலீஸார் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் மூன்று பிரிவாக பிரிந்து திவாகரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

திவாகரின் நண்பரிடம் இருந்து அவரது செல்போன் எண்ணை வாங்கி அவர் இருக்கும் இடத்தை சோதித்துப் பார்த்தனர். அங்குள்ள மதுபான கடையில் அவர் இருப்பது தெரிய வந்தது‌ இதை எடுத்து செல்போன் சிக்னலை கொண்டு போலீஸார் மதுக் கடையில் மது அருந்தி கொண்டிருந்த திவாகரை பிடித்து சிறைக்கு கொண்டு சென்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *