psraman

சென்னை: தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் சண்முகசுந்தரம் ராஜிநாமா செய்த நிலையில், அந்த பதவிக்கு மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமனை, ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது தமிழக அரசு. 

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்குரைஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். 

அரசின் பல்வேறு முக்கிய வழக்குகளில் அரசு சார்பில் ஆஜரான அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு பணியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தொடர்ந்து பணியில் நீடித்து வந்த சண்முகசுந்தரம், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளவர், ராஜிநாமா கடிதத்தை அரசிடம் சமர்ப்பித்தார்.

இதையும் படிக்க | போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் பிசுபிசுத்தது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

தமிழக அரசு சார்பில் பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் சண்முகசுந்தரம் தனது பதவி ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து புதிய தலைமை வழக்குரைஞரை அரசு விரைவில் நியமிக்கும் என தகவல் வெளியானது. 

இந்த நிலையில், தமிழக அரசின் தலைமை வழக்குறைஞர் சண்முகசுந்தரம் ராஜிநாமா செய்த நிலையில், அந்த பதவிக்கு மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.ராமனை, ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது தமிழக அரசு. 

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *