புதுச்சேரி: மத்திய அரசின் வரி வருவாயில் புதுச்சேரிக்கு பங்கு கிடைக்காது என முன்னாள் எம்.பி., ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 16வது நிதிக் குழுவின் பணிகள் குறித்த விதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 2 விதிகள் புதுச்சேரியின் யூனியன் பிரதேசத்திற்கும், அதன் மக்களுக்கும் மீண்டும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

முதல் விதி, மத்திய அரசின் நிகர வருவாயை மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே பகிர்ந்து அளிப்பதை பற்றியும், மாநிலங்களுக்கு உதவி மானியம் வழங்குவதை பற்றியும் கூறுகிறது. 2வது விதி, உள்ளாட்சி அமைப்புகளின் நிதி ஆதாரங்களை நிரப்பும் வகையில் மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்கிறது.

இந்த 2 விதிகளும் மாநிலங்களை பற்றியது என்பதால், புதுச்சேரி இக்குழுவின் விதிகளுக்குள் சேர்க்கப்பட்டு நிதி உதவி பெற முடியாது.

புதுச்சேரியில் உள்ளாட்சி அமைப்புகளை கடந்த 12 ஆண்டுகளாக முடக்கி வைத்துள்ளதால், 2வது விதியின் படியும் புதுச்சேரிக்கு எந்த நன்மையும் கிடைக்காது.

அதனால் தான், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன்.

இதை பற்றி இங்குள்ள கவர்னர், முதல்வர் கவலைப்படவில்லை. 16வதுநிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்த்திருந்தால் 2026ம் ஆண்டிலிருந்து புதுச்சேரி அரசின் நிதி நிலை மேம்பட்டிருக்கும்.

இதை செய்ய தவறியதால், புதுச்சேரி மாநிலமாகும் வரை நிதிக்குழுவின் வரையறைக்குள் செல்ல முடியாது; மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து புதுச்சேரிக்கு பங்கு கிடைக்காது’ என, தெரிவித்துள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement

Dinamalar iPaper Combo
-->

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

-->

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *