தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 25ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு அடிப்படையில் இளநிலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் வெளியிட்டார். மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்களையும், அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கான பட்டியலையும் அமைச்சர் வெளியிட்டார். தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டில் 6 ஆயிரத்து 326 எம்.பி.பி.எஸ் இடங்களும், ஆயிரத்து 768 பல் மருத்துவ இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தரவரிசை பட்டியலில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒதுக்கீட்டில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாணவி கிருத்திகா 596 மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பதாக தெரிவித்தார்.

இதையும் வாசிக்க:  தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு – முழு விபரம் இதோ

தர்மபுரி மாவட்டம் மங்கரை அரசு பள்ளி மாணவன் பச்சையப்பன் 565 மதிப்பெண்களுடன் 2-ம் இடமும், காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவன் முருகன் 560 மதிப்பெண்களுடன் 3வது இடமும் பிடித்துள்ளனர்.

பொதுகலந்தாய்வில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் பிரபஞ்சன் 720 மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். சென்னையை சேர்ந்த சூர்யா சித்தார்த், சேலத்தை சேர்ந்த வருண் ஆகியோர் தலா 715 மதிப்பெண்களுடன் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். மேலும், அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் தமிழ்நாடு மாணவ, மாணவிகள் 5 பேர் இடம்பிடித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *