ஜார்கண்ட் மாநிலத்தில் போட்டித் தேர்வுகளுக்காக படித்துவந்த இளைஞர் ஒருவர் பல் வலிக்கு வைத்தியம் செய்வதற்காக யூடியூப் பார்த்து அரளி விதைகளை அரைத்துச் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சமூகவலைத் தளங்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சில நேரங்களில் இந்த சோஷியல் மீடியா தகவல்கள் மிகவும் உதவிகரமாக இருந்தாலும் அதன் உண்மையைத் தன்மையை ஆராய்ந்து பார்ப்பது அவசியம் என்ற கூற்றை பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தின் பொகாரோ மாவட்டத்திலுள்ள நாவடி பகுதியில் வசித்துவந்தவர் அஜய் மஹ்தோ. 26 வயது இளைஞரான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை எடுத்தவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் போட்டித் தேர்வுகளுக்காக படித்துவந்த இவர் ஹசாரிபாக் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி படித்துவந்துள்ளார்.

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான பல்வலியை உணர்ந்த இவர் மருத்துவரைப் பார்க்காமல் யூடியூப் பார்த்து தானே மருத்துவம் செய்து கொள்ள முயன்றிருக்கிறார். இதற்காக அரளி விதைகளை அரைத்து பயன்படுத்தியுள்ளார். இதனால் உடல்நிலை மோசமடைந்த அவரை பிஷ்னுகர் பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் அஜய் மஹ்தோவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகவும் அரளி விதைகளை அதிகளவில் எடுத்துக்கொண்டதால் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பேசிய அஜய் மஹ்தோவின் தந்தை நுனுசந்த் மஹ்தோ கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையான பல்வலியை உணர்ந்ததால் யூடியூப் பார்த்து சுயமாக மருத்துவம் செய்துள்ளார். ஆனால் அதன் உண்மையைத் தன்மையை உணராமல் இருந்துவிட்டார் என்று கூறி வருத்தம் அடைந்துள்ளார்.

இளைஞர்கள் இணையதளம், வாட்ஸ்அப், யூடியூப் என்று பல்வேறு சமூ கஊடகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மையை தவறவிட்டு விடுகின்றனர் என்று பொதுமக்கள் ஆதங்கம் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *