DMK has lost its right to continue in power edappadi palanisamy

எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)

ஆட்சியில் தொடர்வதற்கான உரிமையை திமுக அரசு இழந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்ட 13 வயது சிறுமி கலையரசி உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். 

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். அதே கடையில் ஷவர்மா சாப்பிட்ட மேலும் 17 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வருகின்றன.

படிக்க தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான்: உதயநிதி

சமீபகாலமாக தமிழகத்தில் நடந்து வரும் இத்தகைய மரணங்களை பார்க்கும்போது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், டெங்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்துவதிலும் இந்த அரசு முற்றிலும் தோல்வியுற்றுள்ளதை உணர முடிகிறது.

மனித உயிர்கள் மீது சிறிதும் அக்கறையின்றி செயல்படும் இந்த அரசை வன்மையாக கண்டிப்பதுடன், பொதுமக்களுக்கான சுகாதாரத்தை காக்கத் தவறிய இந்த அரசு இனியும் ஆட்சியில் தொடர்வதற்கான தனது தார்மீக உரிமையை இழந்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: