மத்தியில் ஆட்சியில் இருந்துவரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தக் கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த மாதம் பீகார் மாநிலத்தின் பாட்னாவில் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு பகுதியில் ஜுலை 17, 18 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்ற நிலையில் பல்வேறு முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து இந்தக் கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்று கொண்டதாகவும் புதிய கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கக் கூட்டணி (இந்தியா) Indian National Developmental Inclusive Alliance எனப் பெயர் வைக்கப்பட்டு உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர்களின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என்றும் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்க 11 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதிய கூட்டணி கட்சிக்கு செயலகம் என்று அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையடுத்து பேசிய முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இருவேறு சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம் இது என்றும் ஒற்றுமை என்னும் இந்தியாவிற்கும் மோடிக்கும் இடையிலான போராட்டம் இது என்றும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி கூட்டணியில் இணைந்திருக்கும் 26 கட்சிகளின் பட்டியல்,

காங்கிரஸ்

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (TMC)

திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)

ஆம் ஆத்மி கட்சி (AAP)

ஜனதா தளம் (ஐக்கிய)

ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD)

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM)

தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி)-சரத் பவார் பிரிவு

சிவசேனா (UBT)

சமாஜ்வாதி கட்சி (SP)

ராஷ்ட்ரிய லோக் தளம் (RLD)

அப்னா தளம் (காமராவாடி)

ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய மாநாடு (NC)

மக்கள் ஜனநாயகக் கட்சி (PDP)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) விடுதலை

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (ஆர்எஸ்வி)

அகில இந்திய பார்வர்டு பிளாக்

மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக)

விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK)

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (KMDK)

மனிதநேய மக்கள் கட்சி (MMK)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML)

கேரள காங்கிரஸ் (M)

கேரள காங்கிரஸ் (ஜோசப்)

 

 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *