
கோப்புப்படம்
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2844கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 40.38அடியிலிருந்து 39.75அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2,556 கன அடியிலிருந்து வினாடிக்கு 2,844கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 11.96 டிஎம்சியாக உள்ளது.