தெங்குமரஹடா வனப்பகுதியில் செல்ல தடை போலீஸ் குவிப்பு

தெங்குமரஹடா வனப்பகுதியில் உள்ள வழிபாட்டு ஸ்தலத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி செல்பவர்களை தடுத்து நிறுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பவானிசாகர்-தெங்கமஹரடா செல்லும் சாலையில் உள்ளது கெஜலட்டி இங்கே வழிபாட்டு ஸ்தலத்திற்கு நேற்று முதல் இரண்டாம் தேதி வரை மூன்று நாட்கள் விழா நடத்த அனுமதி கேட்டு ஒரு தரப்பின சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் இயக்குனருடன் மனு அளித்தனர்.

ஆனால், இதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மனு கொடுத்த தரப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் மனு அளித்த தரப்பினர் நேற்று காலை செல்வோம் என்று அறிவித்ததாக தெரிகிறதே, இதனைத் தொடர்ந்து கெஜலட்டிக்கு யாரும் செல்லாமல் இருக்க பவானிசாகர் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் காராச்சிக்கொரை மற்றும் வனத்துறை செக் போஸ்ட் ஆகிய இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *