Odisha Train Accident LIVE UPDATES :

“ஒடிசாவில் தங்கியிருந்து காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டும்” ஒடிசா சென்றுள்ள தமிழக குழுவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

 

  1. 3 ஜூன் 2023 9:53 PM – ரெயில் விபத்து: ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் உடன் தமிழக குழு சந்திப்பு..!
  2. 3 ஜூன் 2023 8:13 PM – ரெயில் விபத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்: பிரதமர் மோடி உறுதி
  3. 3 ஜூன் 2023 8:11 PM – ரெயில் விபத்துக்கு யார் காரணம் என்பதை மத்திய அரசு உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும்: ஆ.ராசா எம்.பி.
  4. 3 ஜூன் 2023 7:15 PM – “ஒடிசாவில் தங்கியிருந்து காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டும்” ஒடிசா சென்றுள்ள தமிழக குழுவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
  5. 3 ஜூன் 2023 7:07 PM – பிரதமரின் கனவு திட்டங்களை நிறைவேற்றாமல், மக்களின் பாதுகாப்பிற்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்” – சிவகங்கையில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேட்டி
  6. 3 ஜூன் 2023 6:23 PM – ஒடிசா ரெயில் விபத்து பலி எண்ணிக்கை 288 ஆக அதிகரிப்பு- 56 பேர் கவலைக்கிடம்
  7. 3 ஜூன் 2023 5:40 PM – ஒடிசா ரயில் விபத்தில் இதுவரை மேற்கு வங்கத்தை சேர்ந்த 31 பேர் உயிரிழப்பு
  8. 3 ஜூன் 2023 4:55 PM – இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரெயில் விபத்து மாறியிருக்கிறது- கமல்ஹாசன்
  9. 3 ஜூன் 2023 4:55 PM – கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1,257 பேர் முன்பதிவு செய்து பயணித்ததாக தகவல்
  10. 3 ஜூன் 2023 4:52 PM – ஒடிசாவில் ரெயில் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு ரெயில் விபத்து நடைபெற்ற இடமான பாஹநஹாவில் பிரதமர் நரேந்திர மோடிநேரில் ஆய்வு செய்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்வதையொட்டி பாஹநஹாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. டெல்லியிலிருந்து புவனேசுவரத்துக்கு தனி விமானத்தில் வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் பாஹநஹாவுக்கு வருகை தந்துள்ளார். ரெயில் விபத்து நடைபெற்ற இடத்தில் நடைபெறும் சீரமைப்புப் பணிகளை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். சீரமைப்பு பணிகள் குறித்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி ஆய்வுக்கு பிறகு கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.
  11. 3 ஜூன் 2023 3:50 PM –  ரெயில் விபத்தை தவிர்க்கும் கவாச் தொழில்நுட்பம் ஏன் கோரமண்டல் பாதையில் இல்லை? – திரிணாமுல் காங்கிரஸ் திரிணாமூல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலேட் தனது டுவிட்டர் பக்கத்தில், “ ரயில் விபத்தை தவிர்க்கும் கவாச் தொழில்நுட்பம் ஏன் கோரமண்டல் பாதையில் இல்லை?ஏன் மொத்த இந்திய ரெயில் பாதைகளில் 2% மட்டுமே கவாச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கிறது.. மத்மா பானர்ஜி (2011 -2012) ரயில்வேதுறை அமைச்சராக இருந்தபோது Train Collision Avoidance System ( ரயில் மோதுவதை தவிர்க்கும் அமைப்பு ) என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் வழக்கம்போல் அதிகாரத்துக்கு வந்ததும் கவாச் என்று பாஜக அந்த திட்டத்துக்கு பெயர் மாற்றி அதற்கான பெருமையை ஏற்றுக் கொண்டது. ஆனால் 2019 ஆம் ஆண்டுவரை இந்த தொழில்நுட்பத்தில் எந்தவித முன்னேற்றத்தையும் பாஜக அரசு செய்யவில்லை. 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் மூன்று நிறுவனங்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
  12. 3 ஜூன் 2023 3:32 PMஒடிசா ரயில் விபத்து குறித்து நேரில் ஆய்வு செய்த பின் மேற்கு வங்ககாள முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:- “கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சிறந்த விரைவு ரெயில்களில் ஒன்று; நான் 3 முறை ரெயில்வே மந்திரியாக இருந்துள்ளேன், நான் பார்த்ததிலேயே இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரெயில் விபத்து இதுவாகும்! இதுபோன்ற வழக்குகள் ரெயில்வே பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் விசாரித்து அறிக்கை தருகிறார்கள்; எனக்குத் தெரிந்த வரை ரெயிலில் விபத்துகளை தடுக்கும் பாதுகாப்பு கருவி எதுவும் இல்லை; பாதுகாப்பு கருவி ரெயிலில் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது; இறந்தவர்களை திரும்ப கொண்டு வர முடியாது, ஆனால் இப்போது எங்களின் மீட்பு பணி தொடரும்!”  என கூறினார்.
  13. 3 ஜூன் 2023 1:22 PM – ஒடிசா ரெயில் விபத்து: சிறப்பு ரெயில்கள் மூலம் 383 பேர் சென்னை அழைத்து வரப்படுகிறார்கள் சென்னை ஒடிசாவில் பாலசோர் பகுதியில் ரெயில் விபத்தால் நூற்றுக்கணக்கான பயணிகள் கடும் தவிப்புக்குள்ளானார்கள். விபத்துக்குள்ளான 2 பயணிகள் ரெயிலில் சுமார் 2 ஆயிரம் பயணிகள் பயணித்தது தெரிய வந்து உள்ளது. அவர்களில் பாதி பேர் காயம் அடைந்து உள்ளனர். சுமார் 1000 பயணிகள் அந்த பகுதியில் நேற்று இரவு தவிக்க நேரிட்டது. பலர் உடனடியாக பஸ்களை பிடித்து மற்ற பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றனர். தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து எப்படி செல்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான பயணிகள் விபத்து நடந்த பகுதிக்கு அருகிலேயே அமர்ந்திருந்தனர். அவர்களை குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை ரெயில்வே அதிகாரிகள் இன்று காலை செய்தனர். இதற்காக விபத்து பகுதிக்கு அருகே வரை சிறப்பு ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி மேற்கு வங்காளத்தில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. சென்னை சென்ட்ரலில் இருந்தும் சிறப்பு ரெயில் ஒன்று புறப்பட்டு சென்று உள்ளது. அந்த ரெயில் பத்ரக் நகரம் வரை சென்று அங்கிருந்து பயணிகளை ஏற்றி சென்னை திரும்பும் என்று தெரிய வந்துள்ளது. அந்த ரெயிலில் 250 பயணிகள் அழைத்துவரப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல புவனேஸ்வரத்தில் இருந்தும் மற்றொரு சிறப்பு ரெயில் சென்னைக்கு இயக்கப்படுகிறது. அந்த ரெயிலில் 133 பேர் அழைத்துவரப்படுகிறார்கள். மொத்தம் 383 பேர் ஒடிசாவில் இருந்து சென்னை திரும்புகிறார்கள் இவர்களை அழைத்து வரும் சிறப்பு ரெயில்கள் நாளை காலை சென்னை ரெயில் நிலையம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  14. 3 ஜூன் 2023 1:08 PM – மாற்று தண்டவாளத்தில் 127 கி.மீ. வேகத்தில் சென்ற சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ்? – விபத்து குறித்த அதிர்ச்சி தகவல்.
  15. 3 ஜூன் 2023 1:06 PM –  ஓடிசா ரெயில் விபத்து: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆழ்ந்த இரங்கல் ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உள்ளார். 
  16. 3 ஜூன் 2023 1:00 PM –  நேற்று நடந்ததை விட மிக கோர விபத்து.. இந்தியாவில் 800 உயிரை பறித்த அந்த விபத்து நடந்தது எங்கே…?
  17. 3 ஜூன் 2023 12:40 PM – ஒடிசா சென்றடைந்த அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சிவசங்கர்! ரெயில் விபத்து மீட்புப் பணிகள் மற்றும் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்ய ஒடிசா சென்றடைந்த அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சிவசங்கர்!
  18. 3 ஜூன் 2023 12:35 PM –  ஒடிசா ரயில் விபத்து: ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள உதவி எண்கள்
  19. 3 ஜூன் 2023 12:33 PM – ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஆறுதல்
  20. 3 ஜூன் 2023 12:22 PM – ஒடிசா ரெயில் விபத்து: மத்திய தொழில் பாதுகாப்பு உதவி ஆய்வாளர் மாமியார் – ஐந்து வயதுக்குழந்தை உயிர் தப்பினர்; சென்னை: ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கிய தமிழகத்தைச் சேர்ந்த நபர்களை முதலுதவி சிகிச்சைக்குப் பின் மூலம் தமிழகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புவனேஸ்வரில் இருந்து இன்று மாலை அவர்களை தமிழகம் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பணிபுரிந்து வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் லிபானிதாஸ் இவர் சென்னை வரும் போது விபத்திற்குள்ளானார். இவரோடு ஐந்து வயதுக்குழந்தை மாமியாரோடு ரெயிலில் சென்னை வந்த போது விபத்தில் சிக்கிக்கொண்டார் லேசான காயமடைந்த அவர் சக பயணிகளைக் காப்பாற்றினார். தற்போது அரசு ஏற்பாடு செய்த ரெயிலில் 300க்கும் மேற்பட்டவர்களுடன அவர் சென்னை வந்து கொண்டிருக்கிறார்.
  21. 3 ஜூன் 2023 11:53 AM – ஒடிசா ரெயில் விபத்து: தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் நிலை என்ன…? ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் விவரங்கள் குறித்து அறிந்து கொள்ள, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பொதுமக்களுக்காக அவசர கட்டுப்பாட்டு அறை அமைப்பு தமிழ்நாடு அரசின் அவசர கட்டுப்பாட்டு மையத்தின் எண்கள்                                                                                          9445869843, 9445869848, 044-2859 3990
  22. 3 ஜூன் 2023 11:32 AM – மீட்புப் பணிகளுக்கு உதவிய உள்ளூர் மக்களுக்கு நன்றி முதல் மந்திரி நவீன் பட்நாயக் : உள்ளூர் மக்கள் உதவியால் விபத்து நடந்த இடத்தில் முழுமையாக மீட்புபணிகள் முடிவடைந்து உள்ளன. ரெயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் இன்று நிலத்தடி மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.மேலும் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனைந் அடத்தினார். பாலாசோர் மாவட்ட தலைமையக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணிகளையும் பட்நாயக் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் நிறுபர்களுக்கு பேட்டி அளித்த நவீன் பட்நாயக் இது மிகவும் சோகமான ரெயில் விபத்து. இடிபாடுகளில் இருந்து மக்களை காப்பாற்ற ஒரே இரவில் உழைத்த உள்ளூர் மக்களுக்கும், உள்ளூர் குழுக்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். ரெயில்வே பாதுகாப்புக்கு எப்போதும் முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கூறினார்.
  23. 3 ஜூன் 2023 11:19 AMஒடிசா ரெயில் விபத்து : பிரதமர் மோடி நேரில் ஆய்வு…! ஒடிசா ரெயில் விபத்து குறித்த நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி அவசர கூட்டத்தை கூட்டியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்ய உள்ளார். முன்னதாக ரெயில் விபத்து குறித்து ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவிடம் பேசி நிலைமையை கேட்டறிந்தார். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி டுவீட் செய்து இருந்தார்.———————–Live Updates———————–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *