தமிழ்நாடு காவல்துறையின் 12 புதிய கட்டுப்பாடுகள்:

1. ஆர்.எஸ்.எஸ். பேரணியின் போது தனி நபர்களை குறிப்பிட்டோ சாதி, மதம் பற்றியோ எக்காரணம் கொண்டும் யாரும் தவறாகப் பேசக் கூடாது.

2. இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக எந்தவித கருத்துக்களையும் பேசக்கூடாது.

3. நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஊறுவிளைவிக்கும் எந்த செயலையும் யாரும் செய்யக்கூடாது.

4. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் பேரணி மற்றும் நிகழ்ச்சியை நடத்தி முடிக்க வேண்டும்.

சைலேந்திரபாபு

சைலேந்திரபாபு

5. ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் கம்பு மற்றும் ஆயுதங்கள் எதையும் கைகளில் ஏந்திச் செல்லக்கூடாது.

6. ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருப்பவர்கள் குடிநீர் வசதி, முதல் உதவி, நடமாடும் கழிவறைகள், கேமராக்கள், தீயணைப்பு கருவிகள் போன்றவற்றை ஏற்படுத்திக்கொள்ள காவல்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பினருடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்.

7. காவல்துறை அனுமதி அளித்துள்ள வழித்தடத்தில் மட்டுமே பேரணி செல்லவேண்டும். அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இடதுபுறமாக மட்டுமே ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட சாலையில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே பேரணிக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

8. ஊர்வலத்தை நடத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், ஊர்வலத்தில் செல்பவர்களை ஒழுங்குப்படுத்தவும் காவல்துறைக்கு உதவும் வகையில் போதுமான தன்னார்வலர்களை நியமித்திருக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்

9. பெட்டி வடிவிலான ஒலி பெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒலி சத்தம் 15 வாட்ஸ்-களுக்கு மிகாமல் இருப்பது அவசியம். கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக்கூடாது.

10. ஊர்வலத்தில் செல்பவர்கள் மதம், மொழி, கலாசாரம் மற்றும் பிறகுழுக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.

11. பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதனை ஏற்கும் வகையில் ஊர்வல ஏற்பாட்டாளர்கள் உறுதி மொழி அளிக்க வேண்டும்.

12. இந்த நிபந்தனைகள் எதையும் ஊர்வலத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது. அப்படி மீறும் வகையில் செயல்பட்டால் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *