புதுடில்லி-ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் – முன்னாள் துணை முதல்வர்
சச்சின் பைலட் இடையே நீடிக்கும் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய, மூத்த
தலைவர் கமல்நாத்தை, காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது.

latest tamil news

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது.

இவருக்கும், முன்னாள் துணை முதல்வரான சச்சின் பைலட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய சச்சின் பைலட், காங்., மேலிடம் சமாதானம் செய்ததை அடுத்து அமைதியானார்.

இதற்கிடையே,
வசுந்தரா ராஜே தலைமையிலான முந்தைய பா.ஜ., ஆட்சியில் நடந்த ஊழல்கள்
குறித்து விசாரிக்கக் கோரி, முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக,
சமீபத்தில் சச்சின் பைலட் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.

இந்த
ஆண்டு இறுதியில் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், சொந்தக்
கட்சிக்கு எதிராக சச்சின் பைலட் போராட்டம் நடத்தியது, பரபரப்பை
ஏற்படுத்தியது.

இந்நிலையில், முதல்வர் அசோக் கெலாட் – சச்சின் பைலட்
இடையே நீடிக்கும் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய, ம.பி., முன்னாள்
முதல்வரும், மூத்த தலைவருமான கமல்நாத்தை, காங்., மேலிடம் நியமித்துள்ளது.

இதன்படி,
கமல்நாத், காங்., தேசிய பொதுச் செயலர் வேணுகோபால் ஆகியோர், நேற்று
சச்சின் பைலட்டை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது,
பைலட்டின் கோரிக்கைகள் குறித்து, இருவரும் கேட்டறிந்துள்ளனர்.

latest tamil news

அப்போது,
வசுந்தரா ராஜேவுக்கு எதிராகத்தான் உண்ணாவிரதப் போராட்டத்தை
நடத்தியதாகவும், காங்., அரசை எதிர்த்து போராட்டம் நடத்தவில்லை என்றும்,
அவர்களிடம் சச்சின் பைலட் கூறியதாகத் தெரிகிறது.

சச்சின் பைலட் தரப்பு வாதங்களை மேலிடத்திற்கு தெரிவிக்க, கமல்நாத், வேணுகோபால் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *