தமிழக கவர்னர் ரவி: இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசார தலைநகராக, தமிழகம் இருக்கிறது. தமிழ் மொழிக்கு, 3,500 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல; அதற்கும் முந்தைய வரலாறு உண்டு. ஹிந்தி மொழியை விட, தமிழ் மிகவும் பழமை வாய்ந்தது. சமஸ்கிருதம் மட்டுமே, தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி. தமிழ் மீது ஹிந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது.

latest tamil news

டவுட் தனபாலு: ‘ஹிந்தியை திணிக்க பார்க்கிறாங்க’ன்னு, அடிக்கடி நம்ம ஊர் அரசியல்வாதிகள் கூச்சல் போடுறாங்களே… ஹிந்தி பேசும் மாநிலத்தில் இருந்து வந்த கவர்னரே, ‘அதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை’ன்னு சொல்லிட்டாரே… இனியாவது, இவங்க கூப்பாடு அடங்குமா என்பது தான் எங்க, ‘டவுட்’!



இந்திய குடியரசு கட்சியை சேர்ந்த, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் இணை அமைச்சர், ராம்தாஸ் அத்வாலே: பா.ஜ.,வுக்கு எதிராக ஒன்றிணைய, எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தையும் வீழ்த்தி வெற்றி பெற, பிரதமர் நரேந்திர மோடி ஒருவர் மட்டுமே போதும்.

டவுட் தனபாலு: மத்தியில், பா.ஜ., தனி பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்துகிறது. இருந்தாலும், கூட்டணி கட்சியான உங்களை மதிச்சு, மத்திய இணை அமைச்சர் பதவி கொடுத்திருக்குது… போகும் இடம் எல்லாம், மோடியின் புகழ் பாடும் உங்களுக்கு, அடுத்து, பா.ஜ., ஆட்சி அமைந்தால், ‘கேபினட்’ அமைச்சர் பதவி உறுதி என்பதில், ‘டவுட்’டே இல்லை!



பத்திரிகை செய்தி: நாடு முழுதும் உள்ள, 51 மின் வினியோக நிறுவனங்களின் நிதி நிலை, செயல் திறனை ஆராய்ந்து, ‘ஏ பிளஸ், ஏ, பி, பி மைனஸ், சி, சி மைனஸ், டி’ ஆகிய, ‘கிரேடு’களை, மத்திய மின் துறை வழங்கி உள்ளது. இதில், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், ‘சி மைனஸ்’ கிரேடுடன், 49வது இடத்தை பிடித்துள்ளது.

latest tamil news

டவுட் தனபாலு: இது தான், தமிழகத்தை, ‘நம்பர் ஒன்’ ஆக்கும் லட்சணமா… இதைப் பற்றி கேட்டா, ‘டி கிரேடு’க்கு ஒரு படி முன்ன தானே இருக்கோம்னு, தி.மு.க., தரப்பினர் வியாக்கியானம் பேசினாலும், பேசுவாங்க என்பதில், ‘டவுட்’டே இல்லை!

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *