நவ்யாஸ்

கிருஷ்ணகிரி;

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த U.சினிகிரிப்பள்ளியை சேர்ந்த முனிராஜ் என்பவரது மகள் நவ்யாஸ்ரீ. கெலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். திங்கட்கிழமை மாலை கெலமங்கலத்திலிருந்து தருமபுரி செல்லக்கூடிய அரசு பேருந்தில் ஏறிய அவர், சினிகிரிப்பள்ளிக்கு பயணித்துள்ளார்.

ஆனால் அவர் ஏறிய பேருந்து சினிகிரிப்பள்ளி நிறுத்தத்தில் நிற்காமல் பல மீட்டர்கள் தூரம் சென்றதாக சொல்லப்படுகிறது.  தனது கிராமத்தில் பேருந்து நிற்காததால் மாணவி ஓடும் பேருந்திலிருந்து குதித்துள்ளார். அப்போது, மாணவி உடல் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கியுள்ளது. இதில், படுகாயமடைந்த மாணவியை, அதே பேருந்தில் உத்தனப்பள்ளி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவி, மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நவ்யாஸ்ரீ

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவி நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது உத்தனப்பள்ளி போலிசார் சாலை விபத்தை ஏற்படுத்தியதற்கான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவயின் இறப்பு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *