“அந்நிய சக்திகளோடு சேர்ந்து கொரோனா சதித்திட்டம் தீட்டி பல லட்சம் இந்திய மக்களை படுகொலை செய்த கொடுங்கோலன் மோடியை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும்” என்று தொடர்ந்து போராடி வருகிறோம். மேலும் மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறோம்.

🛑 இதனால் ஆத்திரமடைந்து எங்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என எச்.ராஜா உள்ளிட்ட பாஜக வினர் முதல்வர் ஸ்டாலினுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கின்றனர். இதன் காரணமாக கடந்த 14.08.2021 அன்று என்னையும் அப்பா ஆனந்தனையும் சென்னை கவர்னர் மாளிகை முன்பாக கைது செய்து புழல் சிறையில் அடைத்தது திமுக அரசு.

🛑 23 நாள் சிறையில் இருந்து ஜாமீனில் வந்தாலும் கண்டிசன் பெயில் என்ற பெயரில் கடந்த 4 மாதங்களாக சென்னைக்கும் மதுரைக்குமாக எங்களை அலையவைத்து அலைக்கழித்தனர்.

🛑 தொடர்ந்து கைது, வழக்கு, வீட்டுச்சிறை என அதிமுக ஆட்சியைப் போலவே திமுக ஆட்சியிலும் எங்கள் மீது போலீஸ் அடக்குமுறை ஏவப்படுகிறது. இந்த அடக்குமுறைக்கெல்லாம் அஞ்ச மாட்டோம். பாசிச மோடி அரசு நம் நாட்டுக்கும் மக்களுக்கும் செய்துள்ள துரோகத்தை தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்.
______

நீதிமன்றத்தை அவதூறாக பேசியது, மதக்கலவரத்தை தூண்டியது, பெரியாரை இழிவாகப் பேசியது உள்ளிட்ட பல வழக்குகள் எச்.ராஜா மீது உள்ளன.

எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென எதிர்கட்சித் தலைவராக இருந்த போது இன்றைய முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக வின் நெருக்கடியால் எங்களை கைது செய்து சிறையில் அடைக்கும் ஸ்டாலின் அரசுக்கு எச்.ராஜாவை கைது செய்யும் துணிவுள்ளதா?

( படம்: எங்களை கைது செய்யக் கோரிய எச்.ராஜாவின் டிவிட்டர் பதிவு)

– நந்தினி ஆனந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *