டெல்லி:

நாடாளுமன்ற மாநிலங்களைவையில் இன்ரு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், எதிர்கட்சிகள் முக்கிய பிரச்சினைகள் பேச அனுமதியளிக்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் 12வது நாளான இன்று, எதிர்கட்சிகளைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டங்களை தீவிரப்படுத்தியது. மேலும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே 12 ராஜ்யசபா எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல்காந்தி, பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக அரசை கடுமையாக சாடினார்.

எந்த விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் மசோதாக்களுக்குப் பின் மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது எனக் குற்றம்சாட்டிய ராகுல்காந்தி, இது நாடாளுமன்றத்தை நடத்துவதற்கான வழி அல்ல எனவும், பிரதமர் அவைக்கு வரமாட்டார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எந்தப் பிரச்சினையையும் எழுப்ப எங்களுக்கு அனுமதி இல்லை என்றதோடு, இது ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டவசமான கொலை என்று காந்தி கூறியுள்ளார்.12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது இந்திய மக்களின் குரல் நசுக்கப்பட்டதன் அடையாளமாக இருப்பதாகக் கூறிய அவர், அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை, நாடாளுமன்றத்தில் முக்கியமான பிரச்னைகளை விவாதிக்க எங்களுக்கு அனுமதி இல்லை என்றும் குற்றம்சாட்டினார். எதிர்கட்சிகளின் கடும் போராட்டத்திற்கு இடையேயும், சிபிஐ இயக்குநரின் பதவிக் காலத்தை தற்போதைய இரண்டு ஆண்டுகளில் இருந்து அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தில்லி சிறப்பு காவல் அமைப்பு திருத்தம் மசோதா 2021 என்ர இந்த மசோதா செவ்வாய்க்கிழமை குரல் வாக்கெடுப்புடன் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவைவில் ஏற்கனவே டிசம்பர் 9, 2021 அன்று மசோதாவை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம்-ஒடிசா, ஹரியானா-இமாச்சலப் பிரதேசம், லடாக்-இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா-கர்நாடகா, அசாம்-அருணாச்சலப் பிரதேசம், அசாம்-நாகாலாந்து, அசாம்-மேகாலயா, அசாம்-மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு இடையே எல்லைப் பிரச்சனைகள் உள்ளன என்றும், கடந்த 7 ஆண்டுகளில் அதாவது 2015 முதல் 8.81 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்துள்ளனர் என்று மக்களவையில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *