மேட்டூர்,
மேட்டூர் அணை நீர்மட்டம் 119.40 அடியை நேற்று மாலை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் இன்று அதிகாலை மேட்டூர் அணை 120 அடியை எட்டியது. மேட்டூர் அணைக்கு வரும் 22 ஆயிரம் கன அடி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. உபரிநீர் திறப்பால் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேட்டூர் அணையின் மூலம் பயன் பெறும் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours