கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் மாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்ட நிலையில் அந்த குழந்தையின் தாய் மீது சமூக வலைதளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது. இந்நிலையில் அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் என்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வெங்கடேஷ் – ரம்யா தம்பதியின் ஏழு மாத குழந்தை தவறி விழுந்தது. இதையடுத்து பொதுமக்கள் உதவியுடன் அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலர் கடுமையாக குழந்தையின் பெற்றோர்களை குறிப்பாக தாயை விமர்சனம் செய்தனர். மேலும் அக்கம் பக்கத்தில் வசிப்பவரும் கண்டித்து உள்ளதாக தெரிகிறது.

இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளான ரம்யா கடந்த சில நாட்களுக்கு முன் தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தை உடன் வந்திருந்தார். இந்த நிலையில் ரம்யா பெற்றோர்கள் திருமண நிகழ்ச்சிக்காக வெளியே சென்று இருந்த போது ரம்யா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

குழந்தையை சரியாக பார்த்து கொள்ளவில்லை என்ற விமர்சனத்தால் மன உளைச்சலுக்கு ஆளான ரம்யா தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *