நீல்கமல் ஸ்லீப் தனது பிராண்ட் அம்பாஸ்டராக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை நியமித்துள்ளது. மேட்ரஸ் உற்பத்தித் துறையில் ஒரு புரட்சியை விளைவித்து, “உங்களுக்காகவென்றே சிந்தித்து வடிவமைக்கப்பட்டது” என்ற  இந்த பிராண்டின் தத்துவத்தை முன்னெடுத்து செல்லும் நோக்கத்துடன் நடிகர் ரன்பீர் கபூருடன் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டிணைப்பு ஒரு உற்சாகமான பயணத்தின் தொடக்கத்தைக் அடையாளப்படுத்துகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக வளமான பாரம்பரியத்தைக் கொண்ட, நீல்கமல் இந்தியாவின் முன்னணி ஃபர்னிச்சர்  நிறுவனங்களில் ஒன்றாக தன்னை நிலைநாட்டிக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களிடையே குறிப்பாக புதிய யுக பார்வையாளர்கள் மத்தியில், ஒரு ஆழ்ந்த தூக்கத்தை வழங்கவல்ல சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு மிகச் சிறந்த தீர்வாக நீல்கமல் ஸிலீப்’ஸ் ஐ மேம்படுத்துவதில் ரன்தீர் கபூருடனான இந்த கூட்டு ஒரு மிகமுக்கியமான பங்கை வகிக்கும். 

மேலும் படிக்க | ஹாரர் திரில்லராக வடிவில் உருவாகி வரும் நெவர் எஸ்கேப் படம்! ரிலீஸ் எப்போது?

பல்திறன் நடிப்பாற்றலுடன் கூடிய இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவராக விளங்கும் அவரது நீண்ட பாரம்பரிய பின்புலம், தனிநபர்களின் ஆழ்ந்த தூக்கம் தொடர்பான பல்வேறு தேவைகளை தயாரிப்பு பொருட்கள் மீதான சலுகைகள் மற்றும் புத்தாக்கங்கள் மூலம் பூர்த்தி செய்யும் நோக்கத்துடனான இந்த பிராண்டின் பயணத்துடன் ஒருங்கிணைந்து முன்னோக்கிச் செல்லும். மெத்தைகள், படுக்கைகள், தலையணைகள் மற்றும் துணைக்கருவிகள் போன்ற பரந்த அளவிலான தயாரிப்புகளுடன் ஒவ்வொரு வாடிக்கையாளரின் தனிப்பட்ட தூக்க பழக்க வழக்கங்களுக்கு உகந்த வகையில் தீர்வுகளை வழங்குவதை நீல்கமல் ஸ்லீப் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
 
இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த நீல்கமல் நிறுவனத் தலைவர் திரு. ஈஷான் பரேக், “நீல்கமல் ஸ்லீப் குடும்பத்தில் எங்களது பிராண்ட் அம்பாசடராக, ரன்பீர் கபூரை வரவேற்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். அவரது ஆற்றல்மிக்க ஆளுமை எங்கள் பிராண்டுடன் முழுமையாக ஒன்றிணைந்து இயங்குகிறது மற்றும் அவரோடுடனான இந்த கூட்டு ஈடு இணையற்ற சௌகரியமான ஆரோக்கியமான தூக்கத்தை வலியுறுத்தும் எங்கள் செய்தியை மேலும் பன்மடங்கு விரிவடையச் செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம். இளம் புதிய யுக பார்வையாளர்கள் மத்தியில்  நிலவும் ரன்பீரின் புகழ் மற்றும் சார்பு மனப்போக்கு காரணிகள் எங்கள் இருப்பை மேலும் வலுப்பெறச்செய்யும் என்பதில் நாங்கள் உறுதியாக நம்புகிறோம். 

மெத்தை வகைப்பிரிவில் ஒரு புரட்சியை நிகழ்த்தி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தத் துறையில் மிகப்பெரிய செயல்பாட்டாளராக விளங்கும் நோக்கத்துடனான எங்கள் பயணத்தில் மெத்தைகளுக்கான எங்கள் அர்ப்பணிப்பையும் இந்த கூட்டு உள்ளடக்கியுள்ளது” என்று கூறினார்.  இந்த கூட்டாண்மை குறித்து கருத்துத் தெரிவித்த பாலிவுட் நடிகரும், நீல்கமல் ஸ்லீப்ஸ் பிராண்ட் அம்பாசடருமான ரன்பீர் கபூர், “ஆழ்ந்த ஆரோக்கியமான தூக்கத்தின் முக்கியத்துவத்தை உண்மையாகவே புரிந்து கொண்டு தனிநபர்களின் தனித்துவமான தூக்க பழக்க வழக்கங்களை மதித்து செயல்படும், பாரம்பரிய புகழ் பெற்ற பிராண்டான நில்கமல் ஸ்லீப் உடன் கூட்டாண்மை கொண்டிருப்பதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். ஒரு ஆரோக்கியமான தரமான ஆழ்ந்த தூக்கத்தை மேம்படுத்துவதில் மெத்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.  

உண்மையிலேயே ஆழ்ந்த சுகமான தூக்க அனுபவத்தை அளிக்கக்கூடிய, தனித்தன்மை வாய்ந்த வசதியான   அற்புதமான தயாரிப்பு வரிசையை நீல்கமல் ஸ்லீப் வழங்கி வருகிறது. நான் பிரச்சாரத்தில் பங்குகொண்ட நாட்களை நான் வெகுவாக அனுபவித்து ரசித்தேன், ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்துக்கான மன எழுச்சியை உருவாக்கும் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றான தூக்கமின்மை குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதில் தாக்கத்தை விளைவிக்கும் பிரச்சாரங்களில் பங்களிக்க மேலும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

மேலும் படிக்க | ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் புதுப்படங்கள்! எதை தியேட்டரில் போய் பார்க்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *