படம் புடிக்கலைனா செருப்பால அடிங்க : ‘ஹாட்ஸ்பாட்’ இயக்குனர் வேதனை
03 ஏப், 2024 – 12:50 IST

சமீபத்தில் வெளியான படம் ஹாட்ஸ்பாட். நான்கு கதைகள் மூலம் புதுமையான கருத்துக்களை சொன்ன படம். இந்த படத்தை விக்னேஷ் கார்த்திக் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். கலையரசன், சோபியா, சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சுபாஷ், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கே.ஜே.பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியர் பிலிம்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே.ஜே.பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் தயாரித்துள்ளனர்.
படத்தை மீடியாக்கள் பாராட்டியபோதும் படத்திற்கு மக்கள் ஆதரவு இல்லாமல் பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க நிர்வாகிகளுக்கு இப்படம் திரையிடப்பட்டது.
திரையீட்டுக்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது: படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் இன்னும் தியேட்டரில் நாங்க எதிர்பார்க்கிற கூட்டம் வரவில்லை . ஒரு வேளை டிரைலர் பார்த்து வராம இருக்காங்களா என தெரியவில்லை . மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்த்தால் கண்டிப்பாக அவர்களுக்கு பிடிக்கும். படம் நன்றாக இல்லாவிட்டால் என்னை செருப்பால் அடிக்கலாம். இதை நான் சும்மா பேச்சுக்காக சொல்லவில்லை. மக்கள் படம் பார்த்துவிட்டு பிடிக்காவிட்டால் இதனை செய்யலாம் என்றார். பேட்டியின் போது விக்னேஷ் கண்கலங்கினார்.
+ There are no comments
Add yours