விசாகபட்டிணம்: நேற்று விசாகப்பட்டிணத்தில் ஒரு நாயகன் உதயமானான். ஆம்! டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக அறிமுக ஐபிஎல் டி20 போட்டியிலேயே 27 பந்துகளில் 5 பவுண்டரிகளையும் 3 சிக்சர்களையும் விளாசி 54 ரன்கள் எடுத்த ஆங்க்ரீஷ் ரகுவன்ஷி இன்றைய பேசுபொருளாகியுள்ளார்.

குறிப்பாக எதிர்முனையில் ‘எங்கு போட்டாலும் அடி.. எப்படி போட்டாலும் அடி’ என்று ஆடிக்கொண்டிருந்த சுனில் நரைனுடன் ஜோடி சேர்ந்து ரகுவன்ஷியும் 8 ஓவர்களில் 104 ரன்களை விளாசித் தள்ளினர். சுனில் நரைன் 39 பந்துகளில் 7 பவுண்டரிகள், 7 சிக்சர்கலுடன் 85 ரன்களை விளாச, ரசல் 41, ஸ்ரேயஸ் அய்யர் 18, ரிங்கு சிங் பினிஷிங் டச்சாக 7 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 26 ரன்கள் எடுக்க கேகேஆர் 272 ரன்களைக் குவித்தது.

தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெறும் 166 ரன்களுக்குச் சரண்டைந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் வைபவ் அரோரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். கேகேஆர் 3க்கு 3 வெற்றிகளுடன் அசத்தி வருகின்றது.

இன்று பேசுபொருளாகிய, வருங்கால நாயகன் என்று வர்ணிக்கப்படும் அங்கிரிஷ் ரகுவன்ஷி ஜூன் 5, 2005-ல் டெல்லியில் பிறந்தவர். ஆனால் 11 வயதிலேயே இவரது குடும்பத்தினர் மும்பைக்கு குடிபெயர்ந்தனர். அப்போது முதல் மும்பைவாசியாகவும் மும்பை வீரராகவும் ஆகிவிட்டார் ரகுவன்ஷி. 2022 யு-19 உலகக்கோப்பையை இந்தியா வென்ற போது அதிக ரன்களை எடுத்து சாதனை புரிந்தவர்.

மும்பைக்கு வந்த இவர் அபிஷேக் நாயர், ஒம்கார் சால்வியிடம் பயிற்சி பெற்றார். அபிஷேக் நாயர் பெரிய டி20 கோச். தினேஷ் கார்த்திக்கே இவரிடம் தான் பிற்பாடு பயிற்சி பெற்று 360 டிகிரி வீரர் ஆனார். மும்பைக்காக லிஸ்ட் ஏ மற்றும் டி20 போட்டிகளில் 2023-24-ல் அறிமுகமானார்.

ஐபிஎல் 2024-ற்கு முன்பாக ரகுவன்ஷியை கேகேஆர் ரூ.20 லட்சம் அடிப்படை விலைக்கு ஒப்பந்தம் செய்தது. நேற்றைய இன்னிங்ஸில் இறங்கியது முதலே அட்டகாசமான ஷாட்களை ஆடினார். வெறுமனே டி20 கசாமுசா ஹிட்டர் போல் தெரியவில்லை. மரபான கிரிக்கெட் ஷாட்களும் இவர் வசம் உள்ளன. குறிப்பாக இறங்கியவுடனேயே இவர் அடித்த 2 ஷாட்கள் கிளாசிக் ரகத்தைச் சேர்ந்தவை.

மேலும் நேற்று இவர் அடித்த ரிவர்ஸ் ஸ்கூப் சிக்ஸ் அதிகம் பேசப்பட்டு வருகின்றது. நல்ல கண்கள், விரைவு கதியில் கால் நகர்த்தல், பந்தின் லெந்த்தை முன் கூட்டியே பார்க்கும் ஐ சைட் போன்றவை ரகுவன்ஷியின் திறனை ஊக்குவிக்கும் காரணிகள். தொடர்ந்து இவருக்கு வாய்ப்பளித்தால் ஐபிஎல் ஸ்டாராக மட்டுமல்ல, இந்திய அணியின் டி20 ஸ்டாராகவும், ஏன் அனைத்து வடிவ ஸ்டாராகவும் ஜொலிக்க முடியும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *