Indian Women Cricket Team Tour To Bangladesh: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி மற்றும் பங்களாதேஷ் பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 5 பொட்டிக்கள் கொண்ட டி20 ஐ தொடர் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி சில்ஹெட்டில் தொடங்க உள்ளது.  கடைசி போட்டி மே 9 ஆம் தேதி அதே மைதானத்தில் நடைபெறுகிறது.  வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஏப்ரல் 2ம் தேதி இந்த தொடருக்கான முழுமையான அட்டவணையை அறிவித்தது. இந்தியா பெண்கள் மற்றும் பங்களாதேஷ் பெண்கள் இடையேயான டி20 ஐ தொடர் ஏப்ரல் 28 ஆம் தேதி சில்ஹெட்டில் தொடங்க உள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கடைசியாக 2023-ல் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மூன்று போட்டிகள் கொண்ட அந்த டி20 தொடரை இந்திய பெண்கள் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றாலும், மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேசம் ஆறுதல் வெற்றி பெற்றது.

மேலும் படிக்க | Mayank Yadav: மயங்க் யாதவின் வேகத்தில் வீழ்ந்த ஆர்சிபியின் மேக்ஸ்வெல், கிரீன்

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த சுற்றுப்பயணம், பங்களாதேஷ் நாட்டில் உள்ள பிட்ச்களின் தன்மை மற்றும் நிலைமைகளுக்குப் பழகுவதற்கு இந்திய வீரர்களுக்கு உதவும். ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பைக்கான தொடரில் விளையாட இந்த இருதரப்பு தொடர் இந்தியாவுக்கு உதவும். இம்முறை போட்டியில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் என்பதால் ஆசிய கோப்பை பெரியதாகவும் சிறப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவர் ஜெய் ஷா ஏற்கனவே இதுபற்றி குறிப்பிட்டுள்ளார். “பெண்கள் டி20ஐ ஆசிய கோப்பை 2024, உலகம் முழுவதும் பெண்கள் கிரிக்கெட்டை ஊக்குவிப்பதில் ஏசிசியின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் புகழ் மற்றும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில், அணிகளுக்கிடையே அதிகரித்துள்ள பங்கேற்பு மற்றும் போட்டித்தன்மையைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த விரிவாக்கம், 2018ல் ஆறு அணிகளாக இருந்து 2022ல் 7 ஆகவும், இப்போது 8 ஆகவும் உள்ளது. இது எங்கள் அர்ப்பணிப்புக்கான சான்றாகும். பெண்கள் விளையாட்டு மற்றும் ஆசிய கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் திறமைக் குழு, வீரர்கள் மற்றும் ரசிகர்களை ஊக்குவிக்கும் ஒரு அற்புதமான போட்டியை நாங்கள் எதிர்பார்க்கிறோம். பெண்கள் டி20 ஆசிய கோப்பை ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக மாறியுள்ளது, இது பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் திறமைகளையும் விளையாட்டின் மீதான ஆர்வத்தையும் வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குகிறது” என்று கூறினார்.

வங்கதேசத்தில் இந்திய பெண்கள் சுற்றுப்பயணம்

1வது டி20 போட்டி ஏப்ரல் 28ம் தேதி சில்ஹெட்டில் நடைபெறுகிறது.
2வது டி20 போட்டி ஏப்ரல் 30ம் தேதி சில்ஹெட்டில் நடைபெறுகிறது.
3வது  டி20 போட்டி மே 2ம் தேதி சில்ஹெட்டில் நடைபெறுகிறது.
4வது டி20 போட்டி மே 6ம் தேதி சில்ஹெட்டில் நடைபெறுகிறது.
5வது டி20 போட்டி மே 9ம் தேதி சில்ஹெட்டில் நடைபெறுகிறது.

மேலும் படிக்க | மீட்டிங்கிற்கு லேட்டா வந்த இஷான் கிஷன்! தண்டனை கொடுத்த மும்பை இந்தியன்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *