கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இந்தப் போட்டியில் கொல்கத்தா சார்பில் சுனில் நரைன் ஓப்பனராக இறங்கி 39 பந்துகளில் 85 ரன்களை அடித்திருந்தார். 217 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருந்தார் இவருடைய ஆட்டம்தான் கொல்கத்தா அணி 272 ரன்களை எட்டுவதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.

நரைனுக்குதான் ஆட்டநாயகன் விருதும் அறிவிக்கப்பட்டிருந்தது. விருதை வாங்கிவிட்டு அவர் பேசுகையில் ஓப்பனராக இறங்குவதற்கான காரணம் என்னவென்று தெளிவாகப் பேசியிருந்தார்.

நரைன்

ஹர்ஷா போக்லேவின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய சுனில் நரைன், “கிரிக்கெட் என்றாலே பேட்டிங் என்று ஆகிவிட்டது. அப்படி ஒரு சூழலில் பேட்டிங் மூலம் முக்கியமான பங்களிப்பை அளிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அபுதாபி நைட்ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தபோதும் நான் ஓப்பனிங் இறங்கவில்லை. அங்கே நான் இறங்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. நிறைய பேட்டர்கள் இருந்தார்கள். இதையெல்லாம் தாண்டி மிகவும் முக்கியமானது அணியின் தேவைதான். அணிக்கு தேவைப்படுவதாலேயே நான் ஓப்பனிங் இறங்குகிறேன். நல்ல அதிரடியான தொடக்கம் கொடுக்க வேண்டியதுதான் என்னுடைய பணி. அதற்காக எவ்வளவு குறைவாக டாட் பால்களை ஆட முடியுமோ அவ்வளவு குறைவாக ஆட வேண்டும் என்பதை மட்டுமே மனதில் நிறுத்திக் கொள்கிறேன். மேலும், சால்ட் என் மீது அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறார். அவருடன் பேட்டிங் செய்வது நன்றாகவே இருக்கிறது.” என்றார்.

நீங்கள் பேட்டர்களுக்கான மீட்டிங்கிலெல்லாம் கலந்துகொள்வதே இல்லையாமே. பௌலர்களுக்கான மீட்டிங்கில் மட்டும்தான் கலந்துகொள்வீர்களாமே? என ஹர்ஷா கேள்வியை வீச, “ஆம். ஏனெனில் பேட்டிங்கில் என்னுடைய ரோல் சிக்கலற்றது. அதில் தெளிவாக இருக்கிறேன். நிறைய விஷயங்களை அதிகமாக தெரிந்துகொள்வதும் பிரச்சனையைத்தான் உண்டாக்கும்.

நரைன்

பேட்டிங்கைத் தாண்டி என்னுடைய பந்துவீச்சையும் நான் அனுபவித்து மகிழ்ச்சியாகவே செய்கிறேன். இது ஒரு நல்ல பேட்டிங் விக்கெட். இங்கே எங்கள் பௌலர்கள் சிறப்பாக வீசி வென்றிருக்கிறோம். இது ஒரு கூட்டு முயற்சி.” என்றார் சுனில் நரைன்.

‘கிரிக்கெட்னாலே பேட்டிங்தான்…’ என்கிற நரைனின் கருத்தில் ஒத்துப்போகிறீர்களா? கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *