ஆந்திர காங்கிரஸின் தலைவரானார் ஒய்.எஸ்.ஷர்மிளா!

ஆந்திர மாநில காங்கிரஸின் தலைவராக, ஒய்.எஸ்.ஷர்மிளா நியமிக்கப்பட்டிருக்கிறார். சமீபத்தில்தான் தனது கட்சியுடன் காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார் ஷர்மிளா. தேர்தல் நெருங்கும் நேரத்தில், தனது சகோதரரான ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஷர்மிளா கடும் சவாலாக இருப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

`தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது!’ – முதல்வர் ஸ்டாலின்

திருவள்ளுவர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் சிஸ்டலின், “தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து, உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்! முதல்வர் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள்

முதல்வர் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள்
முதல்வர் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள்
முதல்வர் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் – முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் – அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர். 133 அடியில் சிலையும் – தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது. குறள் நெறி நம் வழி! குறள் வழியே நம் நெறி!” என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

“பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியான திருவள்ளுவருக்கு மரியாதையை செலுத்துகிறேன்” – ஆர்.என் ரவி

திருவள்ளுவர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார், மேலும் அவர் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் விழா: கிரிக்கெட் வீரர் தோனிக்கு அழைப்பு! 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *