elep

லோயர்கேம்ப் விவசாய நிலத்தில் யானை

கம்பம்: தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள விவசாய நிலப்பகுதியில் யானை புதன்கிழமை பகலில் நடமாடியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் இணைப்பு பகுதியாக லோயர்கேம்ப் உள்ளது. இது ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ளது. இந்த நிலையில் புதன்கிழமை காலையில் கண்ணகி கோயில் அடிவாரம் பகுதியில் உள்ள மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அருகே புளிய மரங்கள் உள்ளது. இந்த பகுதியில் யானை ஒன்று நடமாடியது. விவசாய நிலத்திற்கு வந்த தொழிலாளர்களை விரட்டியது.

இதனால் வேலைகளுக்கு செல்ல விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கூடலூர் வனச்சரகத்தினர் யானையை காட்டுக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *