காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை 3,000 கி.மீட்டருக்கு மேலாக நடைப்பயணமாக மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரை, இமாச்சலப் பிரதேசம், கர்நாடக, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற உதவியது. அதைத் தொடர்ந்து தற்போது லோக் சபா தேர்தலுக்கு முன்னதாக, மணிப்பூர் முதல் மும்பை வரையிலான 6,713 கி.மீ தொலைவிலான பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மல்லிகார்ஜுன முன்னிலையில் ராகுல் காந்தி நேற்று தொடங்கினார்.

பாரத் ஜோடோ நியாய யாத்திரை - Bharat Jodo Nyay Yatra

பாரத் ஜோடோ நியாய யாத்திரை – Bharat Jodo Nyay Yatra

பேருந்து மூலமாக மேற்கொள்ளப்படும் இந்த யாத்திரையில், 15 மாநிலங்கள், 100 மக்களவைத் தொகுதிகள், 337 சட்டமன்றத் தொகுதிகள், 110 மாவட்டங்கள் என மொத்தமாக 67 நாள்களில் 6,713 கி.மீ பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் ராகுல் காந்தி.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *