மதுரை உலக புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டி இன்று தொடங்கியது.  மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் ஜல்லிகட்டு உறுதி மொழி எடுக்கப்பட்டது. முதல் சுற்றில் 50 பேர் களத்தில் இறங்கி உள்ளனர். வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பச்சைகொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.  தைப்பொங்கலை முன்னிட்டும், பொங்கலை வரவேற்கும் விதமாகவும் இன்று முதல் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்குகிறது. இன்று அவனியாபுரத்திலும், நாளை பாலமேட்டிலும், நாளை மறுநாள் 17-ந்தேதி உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. மதுரை மாவட்டத்தில் முதல் நிகழ்வாக இன்று பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதில் பயிற்சி பெற்ற காளைகளும், மாடுபிடி வீரர்களும் களம் இறங்க தயார் நிலையில் இருக்கிறார்கள்.

மேலும் படிக்க | Pongal Gift: 1000 ரூபாயை பெற இன்றே கடைசி நாள்… பொங்கலுக்கு பின்னரும் கிடைக்குமா?

காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவுசெய்து தகுதிபெற்ற மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக முன்பதிவு நடைபெற்று காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மொத்தம் 12,176 காளைகள், 4,514 மாடுபிடி வீரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக, அவனியாபுரத்தில் 2,400 காளைகள், 1,318 மாடுபிடி வீரர்கள் என விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் குலுக்கல் முறையில் 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வாடிவாசல் முன்புறம் மற்றும் அருகில் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் குடியிருக்கும் குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு எந்த நபர்களையும் வீட்டில் இருந்தோ அல்லது மேல் மாடியில் இருந்தோ ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க அனுமதிக்கக் கூடாது. கூடுதலான நபர்களை அனுமதித்து, அதன் விளைவாக சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் வீட்டின் உரிமையாளர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை ஆணையர் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

dog

இந்நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வாடிவாசல் பகுதியில் திடீரென உள்ளே நுழைந்த நாய் அனைவரையும் அசர வைத்துள்ளது.  காவல்துறையினர் பலமுறை விரட்டியும் நாய் அங்கிருந்து செல்லவில்லை, இதனால் ஜல்லிக்கட்டு வாடிவாசல் அரங்கில் சிரிப்பலை ஏற்பட்டது. தற்போதைய நிலவரப்படி நான்காம் சுற்று முடிவில் 360க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட வீரர்கள் களம் இறங்கி விளையாடி வருகின்றனர். 30 பேர் காயமடைந்துள்ளனர்.  

அவனியாபுரம் வாடிவாசலில் பின்புறம் மாடுகளை அழைத்து வரும்போது மாட்டின் உரிமையாளர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு செல்வதால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது தொடர்ந்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  இதுவரை 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர், எட்டு பேர் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நான்காவது சுற்று முடிவில் இதுவரை 415காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதுவரை 200 மாடுபிடி வீரர்கள் விளையாடியுள்ளனர்.  அவனியாபுரம் வாடிவாசல் பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்து வரும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க 20க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் படிக்க | டெல்லி பொங்கல் விழா: தமிழ் நடிகைக்கு அதிக முக்கியத்துவம்… பாஜகவில் ஐக்கியமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *