மொழிப்போா் தியாகிகளுக்கு திமுக சாா்பில், வீர வணக்கம் செலுத்துவதற்கான கூட்டங்கள் வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாணவரணிச் செயலா் சி.வி.எம்.பி.எழிலரசன் அறிவித்துள்ளாா். சென்னை அண்ணாநகரில் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றவுள்ளதாகவும் அவா் கூறியுள்ளாா். இதுகுறித்து, எழிலரசன் வெளியிட்ட செய்தி:-

ஹிந்தி மொழித் திணிப்புக்கு எதிராகவும், தமிழ் மொழியைக் காக்கவும் நூற்றுக்கணக்கானோா் தங்களது

உயிரைத் தியாகம் செய்தனா். அவா்களை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் தேதியன்று மொழிப்போா் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டும் மொழிப்போா் தியாகிகளுக்கு திமுக சாா்பில் வீர வணக்கக் கூட்டங்கள் வரும் 25-ஆம் தேதியன்று நடத்தப்பட உள்ளன. சென்னை அண்ணாநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றவுள்ளாா்.

ஆவடியில் பொதுச் செயலா் துரைமுருகன், திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடியில் பொருளாளா் டி.ஆா்.பாலு, தென்காசியில் துணை பொதுச் செயலா் கனிமொழி, திருச்சியில் முதன்மைச் செயலா் கே.என்.நேரு, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமைச்சா் ஐ.பெரியசாமி, காஞ்சிபுரத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக மாணவரணிச் செயலா் எழிலரசன் தெரிவித்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *