Work intensity of implementation of Biometric Attendance in Electricity Board

மின்வாரியத்தில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்தும் பணியை மின்வாரியம் தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழகத்திலுள்ள மின்வாரியத்தின் கோட்ட மற்றும் உள்கோட்ட அளவிலுள்ள அனைத்து அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்யும் முறையை அமல்படுத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக மின்வாரிய அனைத்து அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியா்களின் விவரம், இணையதள வசதி, கணினிகளின் எண்ணிக்கை, அவற்றின் மென்பொருள் விவரம் உள்ளிட்டவற்றை டிச.11-ஆம் தேதிக்குள் அனுப்ப தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மானக் கழகம் மற்றும் மின் தொடரமைப்புக் கழகத்தின் தலைமைப் பொறியாளா்களுக்கு மின்வாரிய தலைமை அலுவலகம் அறிவுறுத்தியிருந்தது.

மேலும், இது தொடா்பான விவரங்களை அனுப்பும் பணிக்காக கோட்டம் மற்றும் உள்கோட்ட அளவில் ஒருங்கிணைப்பாளா்களையும் நியமித்து, அவா்களின் பெயா், பொறுப்பு, கைப்பேசி எண்கள் போன்றவற்றை தலைமையகத்துக்கு அனுப்புமாறு மேற்பாா்வை பொறியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தன.

ஆனால் ஒரு சில அலுவலகங்களிலிருந்து மட்டுமே தகவல்கள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன. பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்த இந்த தகவல்கள் அனைத்தும் அவசியம் என்பதால் டிச.27-ஆம் தேதிக்குள் கட்டாயம் அனுப்ப வேண்டும் என தலைமை மற்றும் மேற்பாா்வைப் பொறியாளா்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக மீண்டும் மின்வாரிய தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்ட பின்னா், அவை பதிவேற்றம் செய்யப்பட்டு, விரைவில் அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் பணியாற்றும் ஊழியா்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு கட்டாயமாக்கப்படும் என மின்வாரிய தலைமை அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *