90 வினாடிகளுக்கு முன்பாகவே பெல் அடித்ததை அடுத்து விடைத்தாள்களை ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டதாக 39 மாணவர்கள் வழக்கு தொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்கொரியாவில் கல்லூரி நுழைவுத் தேர்வு சமீபத்தில் நடந்த நிலையில் இந்த தேர்வை ஏராளமான மாணவர்கள் எழுதினர். அப்போது தேர்வுக்கான நேரம் முடிவடைவதற்கு 90 வினாடிகளுக்கு முன்பே மணி அடித்ததாகவும், இதனால் ஆசிரியர்கள் உடனடியாக விடைத்தாள்களை பெற்றுக் கொண்டதாகவும் தெரிகிறது.

மாணவர்கள் இன்னும் 90 வினாடிகள் இருக்கிறது என்று கூறிய போதும் ஆசிரியர்கள் விடைத்தாள்களை பெற்றுக் கொண்டதை அடுத்து 39 மாணவர்கள் இது குறித்து அரசை எதிர்த்து வழக்கு தொடைத்துள்ளனர். இன்னும் நேரம் முடியவில்லை என்று ஆசிரியர்களிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதனால் வழக்கு தொடர்ந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் மாணவர்கள் சார்பில் தீர்ப்பு வந்தால் வழக்கு தொடர்ந்த ஒவ்வொரு மாணவர்களுக்கும் 20 மில்லியன் டாலர் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே தென்கொரியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு இதேபோன்று இரண்டு நிமிடங்களுக்கு முன்னதாக பெல் அடித்ததாக மாணவர் ஒருவர் வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *