கோவை: கோவையை அடுத்த பொள்ளாச்சி அருகேயுள்ள நேதாஜிபுரத்தைச் சேர்ந்தவர் தனபிரபு (33). இவர், கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

பணியில் இருந்து விலகிய அவர், பங்கு வர்த்தகத்தில் பணத்தை முதலீடு செய்து வந்தார். மேலும் சிங்காநல்லூர் அருகே உப்பிலிபாளையத்தில் வாடகை வீட்டில் இருந்தபடியே, மாணவர்களுக்கு சிறப்பு வேதியியல் வகுப்புகள் நடத்தி வந்தார். இதற்காக வீட்டிலேயே நைட்ரஜன் வாயு அடைக்கப்பட்ட சிலிண்டரை பயன்பாட்டுக்காக தனபிரபு வைத்திருந்தார்.

வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர், வீட்டில் இருந்த நைட்ரஜன் வாயு சிலிண்டரை திறந்து, அதிலிருந்து வெளியேறிய வாயுவை தொடர்ச்சியாக முகர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார். அவர் வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், சிங்கா நல்லூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு வந்து சோதனை நடத்தியபோது, தனபிரபு எழுதி வைத்த கடிதம் கிடைத்தது.

அதில், ‘தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. வங்கியில் லட்சக் கணக்கில் தனபிரபு சேமித்து வைத்துள்ளார். பேராசிரியர் பணி தவிர, பங்கு வர்த்தகத்திலும் முதலீடு செய்துள்ளார். அதில் ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டு தனபிரபு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *