ஏற்கனவே தாராவி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்புகள் போராட்டமும் நடத்தி இருக்கின்றன. டி.டி.ஆர். ஊழல் குறித்து தாராவி மேம்பாட்டுத்திட்ட செய்தித்தொடர்பாளர் அளித்த பேட்டியில், ”தாராவி மேம்பாட்டுத் திட்டத்திற்கு டி.டி.ஆர். உருவாக்கியதை சிலர் சர்ச்சையாக்க முயற்சிக்கின்றனர். தாராவி மக்களின் நீண்ட கால கனவை தாமதப்படுத்த வேண்டும் அல்லது சீர்குலைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் சில சுயநலவாதிகளின் தூண்டுதலின் பேரில் இது போன்று செய்யப்படுவதாக தெரிகிறது.
தாராவிக்கு உட்பட்ட பகுதிக்கு டி.டி.ஆர்.உருவாக்குவது என்ற முடிவை மாநில அரசு 2018ம் ஆண்டே முடிவு செய்து அரசாணை பிறப்பித்தது. இதில் திருத்தம் செய்து 2022ம் ஆண்டு மீண்டும் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த இரண்டு நிகழ்வுகளும் தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டத்திற்கு டெண்டர் விடுவதற்கு முன்பே நடந்தவையாகும். வெளிப்படையான போட்டி மூலமே டெண்டர் வெளியிடப்பட்டது. தற்போதைய அரசு ஏற்கனவே இருந்தததை தான் அறிவித்து இருக்கிறது. நவம்பர் 7-ம் தேதி வெளியிட்ட அரசாணையில் டி.டி.ஆர்.விற்பனையில் சில கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்து இருக்கிறது.

இதற்கு முன்பு தாராவியில் கிடைக்கும் டி.டி.ஆர்.களை என்ன விலைக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் என்று இருந்தது. ஆனால் புதிய அரசாணையில் நில மதிப்பில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக டி.டி.ஆர்.களை விற்பனை செய்யக்கூடாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கட்டுமான நிறுவனத்திற்கு சாதகமாக திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஆகும். ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படுவதாக கூறுவது இத்திட்டத்தில் இருந்து மக்களை திசை திருப்ப நடக்கும் சூழ்ச்சியாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.