
நம்மிடம் பேசிய விவரமறிந்த சிலர், “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதால், அவருக்கு ஏற்படும் உடல் உபாதைகளை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. ஆகவேதான் பிரபல இதய நிபுணர்கள் மூலம் சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக, அமைச்சர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நவம்பர் 15-ம் தேதி இரவு நடத்தப்பட்ட பரிசோதனையில், முதற்கட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. 16-ம் தேதி காலை இதய நிபுணர்களும் செந்தில் பாலாஜியைப் பரிசோதித்தனர்.
அவருக்கு, மீண்டும் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்துவருகிறார்கள். அப்படி ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால், அமைச்சர் செந்தில் பாலாஜி மேலும் சில நாள்களுக்கு மருத்துவமனையில்தான் இருப்பார்” என்றனர்.
நவம்பர் 20-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடிமீதான மேல்முறையீட்டு மனு, விசாரணைக்கு வரவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது