தமிழ் சீரியலுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிகளுக்கு இடையே சீரியல் டிஆர்பியில் கடும் போட்டி இருக்கிறது. ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் ஒரு சில சீரியல்கள் பெரிய பிராண்டாகவும், பாப்புலராகவும் இருக்கின்றன. தினம் தினம் புதிய திருப்பங்களுடன் செல்லும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் ஜீ தமிழ் தொலைகாட்சியின் பிரபலமான மெகா சீரியல்களில் ஒன்று.

 ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு இந்த சீரியல் அடையாளமாக இருக்கிறது. மிகவும் பிரபலமாக இருக்கும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தாலும், பெண்களுக்கு இந்த தொடர் மீது காதலே இருக்கிறது. தினம் தினம் புதிய திருப்பங்களுடன் செல்லும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் அடுத்த திருப்பம் என்ன என்று தெரிந்துக் கொள்வோம். 

மேலும் படிக்க | ஜவான் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும்? வெளியானது தேதி! 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.  இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஷக்தி புஷ்பாவை பழி தீர்க்க கிளம்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

புஷ்பாவை அடிப்பதற்காக சக்தி கையில் ஒரு கட்டையுடன் செல்கிறாள். அவளை யமுனாவும் துர்காவும் வாசலிலேயே தடுத்து நிறுத்துகிறார்கள். அங்கே வந்த திடியனும் சக்தியை தடுத்து நிறுத்துகிறான். ஆனால் சக்தி எல்லோரையும் மீறி புஷ்பா வீட்டுக்கு செல்கிறாள்.

zee tamil

இந்த நிலையில் வெற்றியை கூட்டிக் கொண்டு வருவதற்காக திடியன் பைக்கில் கிளம்புகிறான்.புஷ்பா வீட்டிற்கு சென்ற சக்தி புஷ்பாவை அடித்து மிரட்டுகிறாள். 

மேலும் படிக்க | தளபதி 68 ஒரு டைம் ட்ராவல் படமா? வெளியான சுவாரஸ்ய தகவல்!

மேலும் அவள் கையை கட்டி தெருவில் இழுத்து வருகிறாள். சங்கிலியும் நீதிமணியும் சக்தியை தடுப்பதற்காக பின்னாடி ஓடி வருகிறார்கள். சக்தி புஷ்பாவை காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறாள்.காவல் நிலையத்திற்கு வெற்றியும் திடியனும் வருகிறார்கள். 

ஸ்டேஷனில் மீனாட்சியை கொலை செய்ய திட்டம் போடவில்லை என்று புஷ்பா எவ்வளவு சொல்வதை சக்தி நம்பவில்லை. அவளுடைய வார்த்தைகளை சக்தி கேட்க மறுக்கிறாள். கடைசியாக புஷ்பா தன் மகன் சண்முகத்தின் தலையில் அடித்து நான் மீனாட்சியை  கொலை செய்ய திட்டம் போடவில்லை என்று சத்தியம் செய்கிறாள். நீதிமணி புஷ்பா பொய் சொல்ல மாட்டாள் தவறாக புரிந்து கொண்டும் இப்படி நடந்து கொள்ளாதே என்று சக்தியை திட்டுகிறார்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்! மீனாட்சியை காப்பாற்ற போராடும் மகள்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *