இயக்குநர் சேரனின் தந்தை காலமானார்

16 நவ, 2023 – 12:32 IST

எழுத்தின் அளவு:


Director-Cherans-father-passed-away

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் சேரன். பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக் கொடிக்கட்டு, ஆட்டோகிராப், பாண்டவர் பூமி உள்ளிட்ட பல வெற்றி படங்களை தந்தவர். இவரது தந்தை எஸ். பாண்டியன் இன்று (நவம்பர் 16) காலை 6 .30 மணிக்கு அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ள பழையூர்பட்டியில் இருக்கும் அவர்களது வீட்டில் காலமானார்.

84 வயதான பாண்டியன் சினிமா ஆப்பரேட்டராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. சிறிது காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை 5 மணி அளவில் 1/14 ஏ, பழையூர்பட்டியில் உள்ள வீட்டில் நடைபெறும். சேரன் தந்தை காலமானதை தொடர்ந்து பல்வேறு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: