முதலமைச்சரோடு இணைந்து புதுவை மாநில பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கிறோம். மக்கள் விவசாயம் செய்ய ஆங்கிலேயர்களை எதிர்த்து, முதல் சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்டவர்கள் பழங்குடியின மக்கள். தெலங்கானாவில் 12 சதவிகிதம் பழங்குடியின மக்கள் இருக்கின்றனர். அவர்களில் ஆறு கிராமங்களை தத்தெடுத்து, பணிகளைச் செய்து வருகிறோம். இன்னும் அவர்களுக்கான வசதிகள் செய்துதரப்படாமல் இருக்கின்றன. பிரதமர் எப்போது ஆட்சிக்கு வந்தாலும் பழங்குடியின மக்களுக்கான பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். முத்ரா வங்கி திட்டத்தில் நான்கில் ஒருவருக்கு எஸ்.சி, எஸ்.டி வகுப்பினருக்கு கடன் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் கூறியிருக்கிறார். `அவர்களின் வங்கிக் கடனுக்கு சகோதரனாக நான் கியாரண்டி’ எனத் தெரிவித்தார்.

பழங்குடியின மக்களைச் சமாதானப்படுத்தும் அதிகாரிகள், ஆட்சியர் வல்லவன்

பழங்குடியின மக்களைச் சமாதானப்படுத்தும் அதிகாரிகள், ஆட்சியர் வல்லவன்

பழங்குடியினர் தயாரிக்கும் கைவினைப் பொருள்கள் விற்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார். பிரதமர் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, வெளிநாட்டுத் தலைவர்களுக்கு வழங்கும் பரிசுப் பொருள்களில் அதிக அளவில் பழங்குடியினர் தயாரிக்கும் பொருள்கள் இருக்கின்றன. பழங்குடியினர் வளர்ச்சிக்கு பிரதமரோடு இணைந்து புதுவை அரசும் செயல்படும்” என்று குறிப்பிட்டார்.

தரையில் அமரவைக்கப்பட்ட பழங்குடியினர்:

விழா அரங்கில் இருந்த இருக்கைகளில் பெருமளவு அதிகாரிகளே அமர்ந்திருந்ததால், விழாவுக்கு அழைத்துவரப்பட்டிருந்த பழங்குடியின மக்களுக்கு இருக்கைகள் இல்லை. அதனால், அவர்கள் தரையில் அமரவைக்கப்பட்டிருந்தனர். `ஏன் தரையில் அமர்ந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்ட செய்தியாளர்களிடம், “விழாவுக்கு அழைத்து வந்தவர்கள்தான் தரையில் அமரும்படி கூறினார்கள்” என்றனர். அதைக் கேட்டு அதிர்ச்சியான பத்திரிகையாளர்கள், உடனே புகைப்படம் எடுத்தனர். அதையடுத்து அவசர அவசரமாக இருக்கைகளைக் கொண்டுவந்து அங்கு போட்ட அதிகாரிகள், பழங்குடியின மக்களை அவற்றில் அமரவைத்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *