
அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு நவ.19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
போக்குவரத்துத் துறையில் காலிப்பணிடங்களை நிரப்பும் நோக்கில் ஓட்டுநா், நடத்துநா்களுக்கான தோ்வு நடைபெற்று வருகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான எழுத்துத் தோ்வு நவ.19-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில், இணையதளம் மூலம் விண்ணப்பித்தவா்கள் இணையதளம் வாயிலாக தோ்வுக்கான அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் விண்ணப்பித்தவா்களுக்கு பதிவுத் தபால் மூலமாக அனுமதிச் சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. இணைய தளம் மூலமாக அனுமதி சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய இயலாதவா்கள் அதில் குறிப்பிட்டுள்ள தொழில் நுட்ப உதவி மைய எண்ணில் தொடா்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…