அந்த வகையில்தான், பரோலில் செல்லும் கைதிகளை கண்காணிக்க ஜி.பி.எஸ் கருவிகளைப் பயன்படுத்துமாறு மத்திய அரசு கூறியிருக்கிறது. சிறை நிர்வாகம் மாநில அரசின் கீழ் வரும் என்பதால், இது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது.

கைதிகளின் காலில் ஜி.பி.எஸ் கருவியைப் பொறுத்துவது சரியா… இது மனித உரிமைகள் மீறல் இல்லையா… இது தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்காதா… என்ற கேள்விகள் வரலாம். அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் ஜாமீனில் விடுவிக்கப்படும் கைதிகளின் உடலில் ஜி.பி.எஸ் கருவிவைப் பொருத்துவதற்கான நடைமுறை அமலில் இருக்கிறது. இத்தகைய நடைமுறை அவசியம்தான் என்று அரசுத் தரப்பு கூறுகிறது. இது எல்லோருக்கும் தேவை இல்லை… அவசியம் ஏற்பட்டால் மட்டுமே இந்த நடைமுறையைப் பின்பற்றலாம் என்ற கருத்து சிலரால் முன்வைக்கப்படுகிறது.
இது குறித்து உங்கள் மேலான கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்..!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.