நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, மாலை 5.45 மணியளவில் பேராலய முகப் பிலிருந்து கொடி ஊர்வலம் தொடங்கியது.

பேராலயத்தை சுற்றிலும் குவிந்திருந்த பக்தர்களின் கூட்டத் துக்கு நடுவே கொடி ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் கொடியை தொட்டு வணங்கினர். கடற்கரை சாலை, ஆரிய நாட்டுத் தெரு வழி யாக மீண்டும் பேராலய முகப்பை கொடி ஊர்வலம் வந்தடைந்தது.

பின்னர், தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார், தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் அடிகளார் ஆகியோர் கொடியை புனிதம் செய்து வைக்க, கொடியேற்றம் தொடங்கியது.

‘ஆவே மரியா’ முழக்கம்: கொடிக் கம்பத்தில், கொடிஏற்றப்பட்டதும், பக்தர்கள் ‘ஆவே மரியா’ என்றும், ‘மாதாவே’ என்றும் பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டபடி சில்லறை காசுகளை கொடிக் கம்பத்தை நோக்கி வீசினர்.

கொடியேற்றப்பட்ட அடுத்த நிமிடம் வாணவேடிக்கை நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலயம் வண்ண விளக்குகளால் மின்னொளியில் ஜொலித்தது. விழாவில், நாகை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார், துணை அதிபரும், பங்குத் தந்தையுமான அற்புதராஜ் அடிகளார் உள்ளிட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, பேராலய கலையரங்கத்தில், மாதா மன் றாட்டு, நற்கருணை ஆசி நடை பெற்று, தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

விழாவை முன்னிட்டு, நாகை மாவட்ட எஸ்.பி ஹர்ஷ் சிங் தலை மையில், 3 ஏடிஎஸ்பிகள், 16 டிஎஸ்பி கள், 83 இன்ஸ்பெக்டர்கள், 150 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 3,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும், பொதுமக்களை கண்காணிக்க 27 உயர் கண்காணிப்பு கோபுரங்கள், 4 ட்ரோன்கள், பேரால யத்தை சுற்றிலும் 760 கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்றன.

செப்.7-ல் பெரிய தேர் பவனி: பக்தர்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால், நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் விழாவில், நாள்தோறும் திருப்பலி, சிறியதேர் பவனி நடை பெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி செப்.7-ம் தேதி இரவு 7.30 மணியளவில் நடைபெறும். செப்.8-ம் தேதி மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *