ராசிக்கு 10 ம் இடத்தில் ராசிநாதனுடன் சுக்கிரன், புதன், குரு, சந்திரன் ஆகிய கிரகங்கள் இணைகின்றன. இது மிகவும் நல்ல விஷயம். சூரியனின் அருகில் செல்லும் கிரகங்களின் சக்தி குறைந்துவிடும். இதை அஸ்தங்க தோஷம் என்பார்கள். எனவே 10 ம் இடத்தில் அமர்ந்த குரு, சுக்கிரன், புதன் ஆகியோர் உங்களுக்குக் கெடுதல் செய்ய முடியாது. மேலும் இதுவரை கண்டக சனியால் குடும்பத்தில் இருந்த பாதிப்புகள் விலகும் காலம் இது. பணி இடத்தில் உங்கள் திறமை பளிச்சிடும். பதவி உயர்வுகள் கிடைக்க ஏற்ற காலம். 11 -க்கும் 2க்கும் உரிய புதன் 10 ல் சஞ்சாரம் செய்வதால் பணி அல்லது தொழில் சம்பந்தமாகப் பணவரவு அதிகரிக்கும். இதுவரை தட்டிப்போன வாய்ப்புகளும் உண்டாகும். எனவே இந்த நாள்களில் மிகுந்த நற்சிந்தனைகளோடு செய்யும் வேலையைச் செய்வது அவசியம்.

பரிகாரம்: சிம்ம ராசிக்காரர்கள், அர்த்தநாரீஸ்வரரை வழிபடுவது குடும்பத்தில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் அதிகரிக்கச் செய்யும். வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை திருவண்ணாமலை அல்லது திருச்செங்கோடு சென்று அர்த்த நாரீஸ்வரரை வழிபட்டு வாருங்கள்.

பாரதி ஶ்ரீதர்

பாரதி ஶ்ரீதர்

ராசிக்கு 9 – ம் இடத்தில் 4 கிரக மற்றும் 5 கிரக சேர்க்கை நிகழ்வதும் ராசியிலேயே கேது அமர்ந்திருப்பதும், இது பித்ருக்களின் ஆசியை உங்களுக்கு வாரி வழங்கக் கூடிய காலம் இது என்பதாகப் புரிந்துகொள்ளலாம். எனவே இந்த நாள்களில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். தடைகள் விலகும். குருபகவானின் பார்வை ராசிக்குக் கிடைப்பதோடு ராசி நாதன் புதன் குருவோடு இணைவது மிகச்சிறந்த நற்பலன்களைக் கொடுக்கும். குடும்பஸ்தானத்துக்கு உரிய சுக்கிரன் 9 ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் நல்லது நடக்கும். சிலர் குடும்பத்தோடு கோயில்களுக்குச் சென்று வழிபாடுகள் செய்துவருவீர்கள். ராசிநாதன் உங்களுக்கு 10 க்கு உரியவர் என்பதால் வேலை சார்ந்த விஷயங்களிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும். என்றாலும் செவ்வாய் அஷ்டமத்தில் ஜூன் 1 முதல் வலுத்து அமர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

பரிகாரம்: ஜூன் 6 -ம் தேதி அமாவாசை தினத்தன்று பித்ரு வழிபாடுகள் செய்து வஸ்திர தானம் செய்து வழிபட சகல துன்பங்களும் நீங்கும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *