மகான்களில் உயர்ந்தவராகவும் சிவபெருமானின் அம்சமாகவும் வணங்கப்படுபவர் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ ஆதிசங்கரர். தேசமெங்கும் விஜயம் செய்து பல புண்ணிய வழிபாடுகளை சகலருக்கும் கற்றுத் தந்த மகாஞானி இவர். இவர் இயற்றி அருளிய ஸ்லோகங்கள் அநேகம். அதில் முக்கியமானது லிங்காஷ்டகம். எதிரிகளின் எதிர்ப்பை எதிர் கொள்ளவும், ஜாதகரீதியான தோஷங்களை நீக்கவும், சவால்களை, கஷ்ட நஷ்டங்களை வெல்லவும் இந்த ஸ்லோகம் பாராயணம் செய்யப்படுகின்றது.
ஸ்ரீலிங்காஷ்டகத்தை அன்றாடம் காலை அல்லது மாலையில் ஈசனை நினைத்து ஜபித்து பாராயணம் செய்துவர சிவபெருமானின் அருள் கிடைத்து வேண்டியவை யாவும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. இதை சிவசந்நிதியில் படித்தால், சிவலோக பிராப்தி கிடைக்கும். சிறப்பான இந்த 8 லோகங்களையும் இடைவிடாமல் படிப்பவர்க்கு அத்தனை பிரச்னைகளும் தீரும். பிணி தீரவும், சகல சௌபாக்கியங்களும் பெறவும், பாவங்கள் ஒழியவும் இந்த பாராயணம் உதவும்.
ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீலிங்காஷ்டகம்!

ப்ரஹ்மமுராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
தேவமுனி ப்ரவார்ச்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
ஸர்வஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
குங்குமசந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
தேவகணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவையர் பக்தி பிரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்
பரமபர பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
லிங்காஷ்டக மிதம் புண்யம்
யஹ் படேச் சிவ ஸந்நிதெள
சிவலோக மவாப்நோதி
சிவேந ஸஹ மோததே
ஸ்ரீலிங்காஷ்டகம் தமிழில்…
தேவராலும் ரிஷிகளாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம், மலர்க்கணைத் தொடுத்த காமனை எரித்து, உயிர்ப்பித்த லிங்கம், ராவணனின் கர்வத்தை அழித்திட்ட லிங்கம், நாளும் நான் வணங்கிடும் அற்புத லிங்கம்!
எல்லாவித சுகந்தங்களாலும் சோபிக்கும் லிங்கம், உண்மையறிவை அளிக்கும் காரண லிங்கம், சித்தரும் தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம், நாளும் நான் வணங்கிடும் அற்புத லிங்கம்!
கனக மாணிக்க மணிகளால் அழகுற்ற லிங்கம், நாக அரசனை அணிந்து ஒளிவீசும் லிங்கம், ஆணவம் கொண்ட தக்ஷப் பிரஜாபதி யாகம் அழித்த லிங்கம், நாளும் நான் வணங்கிடும் அற்புத லிங்கம்!
குங்கும சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட லிங்கம், தாமரை மாலை அணிந்து ஒளிவீசிடும் லிங்கம், பலப்பல பிறவிகளில் சேர்ந்த வினைகளை அழித்திடும் லிங்கம், நாளும் நான் வணங்கிடும் அற்புத லிங்கம்!

தேவகணம் உள்ளிட்ட சகல கணங்களும் வணங்கிடும் லிங்கம், உணர்வு நிறைந்த பக்தியை அளித்திடும் லிங்கம், கோடி சூரியர்களின் ஒளி கொண்ட லிங்கம், நாளும் நான் வணங்கிடும் அற்புத லிங்கம்!
எட்டு இதழ்கள் கொண்ட தாமரையால் சூழ்ந்த லிங்கம், சகல செல்வங்களுக்கும் காரணமான லிங்கம், எட்டு வித ஏழ்மையை அழித்திடும் லிங்கம், நாளும் நான் வணங்கிடும் அற்புத லிங்கம்!
தேவகுரு, தேவர்களில் சிறந்தவர்களால் பூஜிக்கும் லிங்கம், தேவலோக மலர்களால் அர்ச்சிக்கப்படும் லிங்கம், பெரிதினும் பெரிதான, பரமாத்ம லிங்கம், நாளும் நான் வணங்கிடும் அற்புத லிங்கம்!
இந்த லிங்காஷ்டக ஸ்லோகத்தை மனமுவந்து பாராயணம் செய்ய அங்கு புண்ணியம் விளங்கும். இதை சிவ சந்நிதியில் படித்தால், சிவலோகப் பிராப்தி கிடைக்கும். சிவனுடன் இணைந்து சிவாநுபவத்தில் திளைத்து எந்நாளும் ஆனந்தமாக இருக்கலாம்.