திருப்புத்தூர்– இறைவன் அடி சேர்வதே பிறவியின் மகத்துவம்’ என பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில், காரைக்குடி நித்யா அருணாசலம் ஆன்மிக உரை ஆற்றினார்.

பிள்ளையார்பட்டியில் நேற்று சதுர்த்தியை முன்னிட்டு ‘நற்றுணையாவது நமச்சிவாயவே’ என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.

அதில், நித்யா அருணாசலம் ஆற்றிய உரை,

‘நமச்சிவாய நம’ என்ற திருவெழுத்து மந்திரம் நமக்கு வாழ்வில் எப்படி உறுதுணையாக இருக்கும் என்று நமது அருளாளர் பெருமக்கள் பண்வழியில் பாடியுள்ளனர்.

பிறவியை இறைவன் அடிசேர்வதே, பிறவியின் மகத்துவம். எனவே தான் அரிது அரிது மானிடராய் பிறப்பது’ என்று கூறியுள்ளனர்.

இப்பிறவியை நல்லவிதமாக வாழ்ந்து இறைவனடியில் சேர்த்து, மீண்டும் பிறவா நிலை அடைவதற்கான வழி என்ன என்பதை சொல்லியுள்ளனர்.

காரைக்கால் அம்மையார் கயிலாயத்திற்கு சென்ற போது எம்பெருமானே ‘அம்மையே’, என அழைக்கிறார். அப்போது அம்மையார் கேட்டதாக பெரியபுராணம் சொல்வது இறவாத அன்பு வேண்டி, உன்னை மறவா அன்பு வேண்டும்’ என பாடியுள்ளார். இதுபோன்று ‘பிறவா நிலை பெற உதவுவது தான்’ நமசிவாய எனும் மந்திரம்.

இது குறித்து திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். அவரை போன்றே அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரும் பாடினர். நமசிவாய மந்திரத்தின் அருமை பெருமைகளை கூறுவதே பதிகங்கள். வேதம் நான்கினை விட மேற்கோளாக கொண்டது நமசிவாய மந்திரம். வேதத்தை விட சிறந்தது.

அனைத்து அருளாளர்களும் அடுத்த பிறவி எடுக்காமை குறித்து தான் நமக்கு அருளியுள்ளனர், என சொற்பொழிவு ஆற்றினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement

Dinamalar iPaper Combo
-->

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

-->

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *