மத்திய பா.ஜ.க அரசு அறிவித்தபடி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் பற்றிய நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டிருந்தாலும், இந்தக் கூட்டம் அதற்காக மட்டும்தானா அல்லது `ஒரே நாடு; ஒரே தேர்தல்’, பொது சிவில் சட்டம், பெண்களுக்கான இட ஒதுக்கீடு, `பாரத்’ சர்ச்சை போன்றவை குறித்த விவாதங்கள் நடைபெறுமா என்ற சந்தேகங்களும் எழுந்திருக்கின்றன.

இப்படியிருக்க, இன்று காலை 10:30 மணியளவில் நாடாளுமன்றம் கூடுவதற்கு முன் பிரதமர் மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, முதலில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு பேசிய மோடி, “நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத்தொடர் குறுகியதாக இருந்தாலும்கூட தற்போதைய சூழலில் மிக முக்கியமானது. வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளின் அமர்வு இது.
இந்த அமர்வின் சிறப்பு என்னவெனில், 75 ஆண்டுக்காலப் பயணம் தற்போது புதிய இலக்கிலிருந்து தொடங்குகிறது. இந்தப் புதிய இடத்திலிருந்து பயணத்தை முன்னெடுத்துச் செல்கையில், இந்தியாவை 2047-க்குள் வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். அதற்கான முடிவுகள் அனைத்தும் புதிய நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும். இந்தக் குறுகிய அமர்வில், எம்.பி-க்கள் தங்களின் அதிகபட்சமான உற்சாகமான சூழலுக்கு ஒதுக்க வேண்டும்.

வாழ்க்கையில், உற்சாகத்தையும் நம்பிக்கையையும் நிரப்பும் சில தருணங்கள் இருக்கின்றன. இந்தக் குறுகிய அமர்வை நான் அப்படித்தான் பார்க்கிறேன். மேலும், நாளை விநாயகர் சதுர்த்தியன்று புதிய நாடாளுமன்றத்துக்கு நாங்கள் செல்லவிருக்கிறோம். இனி நாட்டின் வளர்ச்சியில் எந்தத் தடையும் இருக்காது. இந்தியா, தனது அனைத்துக் கனவுகளையும் தீர்மானங்களையும் தடையின்றி நிறைவேற்றும். இது குறுகிய அமர்வுதான். இருந்தாலும் இது வரலாற்றுச் சிறப்புமிக்கது” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY