College_Students_Edi_IEDEC213_11462587

 

மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய திமுக ஏதேனும் முயற்சி செய்ததா? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

நூறு சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக மார்தட்டிக்கொள்ளும் முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவையில் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? என்றும் வினவியுள்ளார். 

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி,  நீட் விவகாரத்தில் அனிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்வது தொடங்கி, கல்விக் கடன் ரத்து செய்வது வரை, மாணவர்களை ஏமாற்றி அவர்களின் எதிர்காலத்தை வஞ்சிக்கிறது திமுக அரசு.

படிக்ககாவிரி விவகாரம்: நாளை தில்லி செல்கிறார் சித்தராமையா!

2021 சட்டப்பேரவை பொதுத்தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிப்படி, மாணவர்களின் கல்விக் கடனை உடனடியாக ரத்து செய்திட நடவடிக்கை எடுத்து, அவர்களின் துயர் துடைக்க வேண்டுமென கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்

நூறு சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக மார்தட்டிக்கொள்ளும் திமுக அரசு, 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலின் போது, தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், எந்தெந்த தேதிகளில், எந்தெந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டன என்ற விபரத்தை அறிக்கை மூலம் திமுக அரசின் முதல்வர் அறிவிப்பாரா ? சட்டப்பேரவையில் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? என கேல்வி எழுப்பியுள்ளார். 
 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *