உத்திரப்பிரதேச மாநிலத்தில் சொத்து அபகரிப்பிற்காக உறவினரே இளம்பெண்ணை கொன்று அவரது உடலை அப்புறப்படுத்துவதற்காக ஓலா காரை புக் செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்திரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் வசித்துவந்த இளம்பெண் குசும் குமாரி. இவருக்கு மூதாதையர்களின் வழிவந்த சொத்து ரூ.40 கோடி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சொத்தை அடைவதற்கு தடையாக இருந்த காரணத்தினால் குசும் குமாரியை அவருடைய மைத்துனவர் சவுரவ் தன்னுடைய நண்பர்கள் இருவரின் உதவியுடன் கடந்த ஜுலை 10 ஆம் தேதி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இதையடுத்து கான்பூரில் உள்ள மஹராஜபூர் பகுதியில் இருந்து நொய்டாவிற்கு ஓலா காரை புக் செய்த சவுரவ், அந்த காரில் குசும் குமாரியின் உடலை அப்புறப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். ஆனால் காரின் ஓட்டுநர் மனோஜ், சாக்கு மூட்டையில் இருக்கும் ரத்தக்கறையைப் பார்த்துவிட்டு காரை எடுக்க மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

இதனால் சவுரவ் மற்றும் அவருடைய நண்பர்கள் இருவரும் ஆபாசமாக ஓட்டுநரை திட்டியுள்ளனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து தப்பித்த ஓட்டுநர் நெடுஞ்சாலைக்கு வந்து போலீஸாரின் உதவியை நாடியிருக்கிறார். இதனால் போலீசார் தீவிர விசாரணை செய்த நிலையில் சொந்த கிராமத்தில் சவுரவ் மற்றும் அவருடைய அண்ணி குசும் குமாரி இருவரும் காணாமல் போன நிலையில் சவுரவ் பக்கத்து கிராமத்தில் தன்னுடைய நண்பர்களின் உதவியுடன் ஒரு மூட்டையை எடுத்துக்கொண்டு ஓலா காரில் தப்பிச்செல்ல முயன்றிருக்கிறார்.

இதையடுத்து சவுரவ் சொத்துக்காக தனது நண்பர்களின் உதவியுடன் குசும் குமாரியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனால் சவுரவ் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு குசும் குமாரியின் உடல் தற்போது ஃபதேபூர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சொத்துக்காக சொந்த அண்ணியை கொலை செய்துவிட்டு பின்னர் உடலை அப்புறப்படுத்துவதற்காக ஓலா காரை புக் செய்த சம்பவம் இந்தியா முழுக்கவே பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: